பகர ஆளுனர்

பகர ஆளுனர் (regent) என்பது, முடியாட்சி முறையில், இன்னொருவருக்குப் பதிலாக ஆட்சியைப் பொறுப்பேற்று நடத்தும் ஒருவரைக் குறிக்கும் சொல்லாகும். இது ஒரு முறை சாராத பதவியாகவோ அல்லது முறைப்படி நியமனம் வழங்கப்பட்ட ஒரு பதவியாகவோ இருக்கலாம். பெரும்பாலும் ஒரு மன்னர் இறக்கும்போது முடிக்குரிய வாரிசு மிக இளம் வயதினராக, அவ்விடத்தில் இல்லாதவராக அல்லது இயலாதவராக இருந்தால் அவர் சார்பில் பகர ஆளுனர் ஆட்சியை நடத்துவது உண்டு. பெரும்பாலும், வாரிசுரிமைப்படி அடுத்த நிலையில் உள்ளவர் அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பகர ஆளுனராக இருப்பது உண்டு.

மேற்சொன்ன காரணங்களுக்காக மட்டுமன்றி, முடிக்குரிய வாரிசுகள் எவரும் இல்லை என்ற நிலையிலும் இடைக்கால ஆட்சிப் பொறுப்புக்கு ஒரு பகர ஆளுனர் நியமிக்கப்படுவது உண்டு. முதலாம் உலகப் போருக்குப் பின்னர், பின்லாந்து இராச்சியத்திலும், அங்கேரி இராச்சியத்திலும் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.