பஃறுளி

பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும். இங்கிருந்தே மாந்தரின நாகரிகம் தோன்றியதாக சில நூலாசிரியர்கள் கூறுவர். அதற்கு காரணம் இப்பஃறுளி ஆறு நிலநடுக்கோடு பக்கத்தில் அமைந்திருந்திருந்ததாகவும், சுமேரியர்கள் இவ்வாறு அழியும் முன்பு நடந்த கடற்கோளில் குமரி நாகரிகத்தில் இருந்து பிரிந்ததாக கூறப்படும் கருதுகோள்களும் ஆகும்.[1]

புறநானூறு 9

சிலப்பதிகாரம்

இந்த ஆறு கடற்கோளுக்கு இரையானது பற்றி இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

மாடல மறையோன்

குமரியில் நீராடிவிட்டு திருப்பதிப் பெருமாளைக் கண்டு வணங்கச் சென்றுகொண்டிருந்த மாடலன் என்னும் மறையவன் தென்னவன் என்னும் பாண்டிய மன்னரின் பரம்பரைப் பெருமைகளைச் சொல்லி வாழ்த்துகிறான். (காதை 11)

  1. கடலில் வேல் வீசியது
  2. கங்கையும், இமயமும் கொண்டது
  3. இந்திரன் தலையிலிருந்த முடி வளையத்தை உடைத்து அவன் முத்தாரத்தைப் பிடுங்கித் தன் மார்பில் அணிந்துகொண்டது - ஆகிய சிறப்புகள்.

வடிவேல் எறிந்த பாண்டியன்

'அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள, வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு, தென்திசை ஆண்ட தென்னவன் வாழி' - இப்படித் தென்னவன் வாழ்த்தப்படுகிறான்.

'குட்டம் தொலைய வேலிட்ட' இளஞ்சேரல் இரும்பொறை

இளஞ்சேரல் இரும்பொறை குட்டம் தொலைய வேல் இட்டானாம். குட்டம் என்றால் என்ன? 'நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாயந்து' என்னும்போது குட்டம் என்பது குளம் எனப் பொருள்படுவதைக் காணலாம். அதன் வழி அணுகினால் இந்த அரசன் வேலால் குளத்துக்குத் தடுப்பு அமைத்ததை உணரமுடியும். (பதிற்றுப்பத்து 89)

கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்

சேரன் செங்குட்டுவன் தன் நகருக்குள் புகுந்த கடலைப் பின்வாங்கச் செய்தான். கடல் அரிப்பைத் தடுத்தான். பாறை வேலி போட்டுத் தடுத்தான் போலும்.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

கடல் நிலவயலில் பாய்ந்து வற்றுமிடம் வடிம்பு. உப்பு விளைவிக்க இது பயன்படும். வடிம்பலம்ப நின்ற பாண்டியன் இதனை நன்கு பயன்படுத்திக்கொண்டவன்.


உசாத்துணை

பார்வை

பஃறுளியாறு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.