நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்
நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம் (The On-Line Encyclopedia of Integer Sequences (OEIS)) என்றோ எளிமையாக சுலோவேனின் (Sloane's ) எண்வரிசை என்றோ அழைக்கப்படுவது ஆழமாக தேடக்கூடிய வசதி படைத்த பல்வேறு எண்வரிசைளைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்புப்பதிவகம் அல்லது தரவுத்தளமாகும். இதில் உள்ள தரவுகளை இலவசமாக இணையவழி பெறக்கூடியது.
OEIS என்று அழைக்கப்படும் இந்த நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியத்தில் பதிவாகி, சேமித்து வைத்திருக்கும் வரிசைகளும் செய்திகளும் கணித சிறப்பறிவாளர்களுக்கும் மட்டுமல்லாமல்; கணிதத் தன்னார்வ அறிவாளர்களுக்கும் பயனுடையதாகும். இது பரவலாக சுட்டப்படும் ஓர் அறிவுக்கிடங்காங்காக உள்ளது. இதில் 1,40,000-ற்கும் கூடுதலான எண் வரிசைகள் பதிவாகியுள்ளன. இதுவே இத்தகைய வரிசைகளைக் கொண்டுள்ள தரவுத்தளங்கள் யாவற்றினும் பெரியது.
ஒவ்வொரு பதிவும், அதன் வரிசையில் தொடங்கும் முதல் எண்களையும், சிறப்புச் சொற்களைக் கொண்டிருப்பதுடன், கணித நோக்கங்கள் கணித இலக்கிய இணைப்புகள் முதலியவற்றையும் தருகின்றது. இத்தரவுத்தளத்தில், சிறப்புச் சொற்களைக் கொண்டும், வரிசையின் இடையே தோன்றும் குறுந்தொடர்களைக் கொண்டும் தேடவல்ல வசதி கொண்டது.
உசாத்துணை
- J. Borwein, R. Corless, SIAM Review of ``An Encyclopedia of Integer Sequences by N. J. A. Sloane & Simon Plouffe
- H. Catchpole, Exploring the number jungle online News in Science Australian Broadcasting Corporation
- A. Delarte, "Mathematician reaches 100k milestone for online integer archive," The South End, November 11, 2004, page 5
- B. Hayes, A Question of Numbers, American Scientist January - February 1996
- I. Peterson, Sequence Puzzles, Science News Online, Vol. 163 (2003), No. 20
- I. Peterson, Next in Line, Science News Online, November 16, 1996.
- N. J. A. Sloane, S. Plouffe (1995). The Encyclopedia of Integer Sequences. San Diego: Academic Press. பக். 587. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-558630-2. http://www.research.att.com/~njas/sequences/book.html.