நேரலை குறுந்தகடு
நேரலை குறுந்தகடு (LIVE CD) என்பது வன்தட்டு (HARD DISK DRIVE) துணை இன்றி கணினியின் நினைவகத்தில் இருந்து இயக்குதளத்தை இயக்குவதாகும். இவ்வாறு இயங்கும் இயக்குதளத்தில் நாம் எந்த மென்பொருளையும் நிறுவ இயலாது. ஆனால் ஒரு இயக்குதளத்தில் நாம் செய்யும் வேலைகள் பலவற்றையும் இதிலும் செய்ய இயலும். வன்தட்டில் இருந்து இயங்கும் இயக்குதளத்தை நாம் இயக்கும் பொது நாம் வன் பொருளில் மாற்றங்களை செய்ய இயலும் ஆனால் இந்த நேரலை குறுந்தகட்டில் இருந்து இயங்கும் போது அதனை செய்ய இயலாது. மேலும் இவை கணினியின் தேக்கத்தை சாராமல் செயல்படுகிறது. [1] [2]
பயன்கள்
- லினக்ஸ் வழங்கல் வன்தட்டில் நிறுவுதல் .
- மென்பொருளின் புதிய பதிப்புகளை சோதனை
- வன்பொருள் பட்டியல் மற்றும் சோதனையிடல்
- கணினி பழுது நீக்குதல் மறுசீரமைத்தல்
- அதிக பாதுகாப்பு மற்றும் ஊடுருவலை தடுக்கவள்ளது
- கடவு சொல் மாற்றம் மற்றும் திருட்டில் இருந்து பாதுகாத்தல்
- வலை பாதுகாப்பு சோதனை
- கணினியின் முதன்மை அல்லது காப்புநகல் இயகுதலமாக பயன்படுத்தப்படும்
- கணினி தடயவியல்
- இணைய வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான தளத்தை ஏற்படுத்தி தருகிறது .
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.