நேத்ரோகோனா மாவட்டம்

நேத்ரோகோனா (Netrakona District) (வங்காள: নেত্রকোনা) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மைமன்சிங் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நேத்ரோகோனா நகரம் ஆகும்.

வங்காளதேசத்தில் நேத்ரோகோனா மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

2794.28 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட, வங்காள தேசத்தின் வடகிழக்கில் அமைந்த நேத்ரோகானா மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேகாலயா மாநிலமும், தெற்கில் கிசோர்கஞ்ச் மாவட்டம், கிழக்கில் சுனாம்கஞ்ச் மாவட்டம், மேற்கில் மைமன்கஞ்ச் மாவட்டம் எல்லையாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

மைமன்சிங் கோட்டத்தில் அமைந்த நேத்ரோகோனா மாவட்டம், நேரோகோனா சதர், மோகன்கஞ்ச், மொதோன், காளியாஜூரி, கந்துவா, துர்காபூர், கமலகண்டா, அத்பரா, பர்ஹத்தா மற்றும் புர்பதாலா எனும் பத்து துணை மாவட்டங்களையும்[1], நேத்ரோகோனா, துர்காபூர், கந்துவா, மோகன்கஞ்ச் மற்றும் மொதோன் எனும் ஐந்து நகராட்சிகளையும், எண்பத்தி ஆறு ஒன்றியங்களையும், 2282 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நான்கு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 2400 ஆகும்.

ஆறுகள்

கோன்ஷா, பௌலாய், சோமேஷ்வரி, நிதாய், சகுரா, பத்குரா, தனு, மகேஷ்வரி முதலிய ஆறுகள் இங்கு பாய்கிறது.

பொருளாதாரம்

வேளாண் தொழிலைச் சார்ந்த பொருளாதாரத்தை நம்பியுள்ள இம்மாவட்டத்தில், நெல், சணல், கோதுமை, எண்ணெய்வித்துக்கள், உருளைக்கிழங்கு, பருப்புகள், பழா, மா, வாழை பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல்

2794.28 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 22,29,642 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,11,306 ஆகவும், பெண்கள் 11,18,336 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 99 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 798 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 39.4 % ஆக உள்ளது.[2]

கல்வி

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [தரம் 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைக் கல்வியும், [தரம் 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [தரம் 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Sanjay Sarkar (2012). "Netrokona District". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Netrokona_District.
  2. Community Report Netrokona Zila June 2012

வெளி இணைப்புகள்

24.88°N 90.73°E / 24.88; 90.73

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.