நெதர்லாந்தின் மாகாணங்கள்

நெதர்லாந்து மாகாணங்கள் என அழைக்கப்படும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் அரசியின் ஆணையாளர்கள் (Commissaris van de Koningin) எனப்படுபவர்களால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. லிம்பர்க் மாகாணத்தில் மட்டும் இவர்கள் ஆளுனர்கள் (Gouverneur) என அழைக்கப்படுகின்றனர். எல்லா மாகாணங்களும் முனிசிப்பாலிட்டி எனப்படும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. 13 மார்ச் 2010 நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த முனிசிப்பாலிட்டிகளின் தொகை 430 ஆகும்.[1]

நெதர்லாந்தின் மாகாணங்கள்
Provinces of the Netherlands
Provincies van Nederland  (டச்சு மொழி)
வகைஒருமுக அரசு
அமைவிடம் நெதர்லாந்து
எண்ணிக்கை12 மாகாணங்கள்
மக்கள்தொகைகுறைந்தபட்சம்: ஜீலேண்டு, 381,568
அதிகபட்சம்: தென் ஒல்லாந்து, 3,650,222
பரப்புகள்குறைந்தபட்சம் (நீர் பரபரப்பை சேர்த்து): Utrecht, 1,450 km2 (559 sq mi)
அதிகபட்சம் (நீர் பரபரப்பை சேர்த்து): பிரீஸ்லாண்டு, 5,700 km2 (2,220 sq mi)
அரசுமாகாண சபை
உட்பிரிவுகள்நகராட்சி

நிர்வாகம்

நெதர்லாந்து நாடு நீர் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நீர் மேலாண்மைக்குப் பொறுப்பாக உள்ள நீர்ச் சபைககள் (water board) இம் மாவட்டங்களை நிர்வகிக்கின்றன. 2005 ஆம் ஆண்டு சனவரி முதலாம் தேதி 27 இவ்வாறான நீர் மாவட்டங்கள் இருந்தன. நாடு உருவாவதற்கு முன்பே நீர்ச் சபைகள் இருந்துள்ளன. 1196ல் இவை முதன் முதலில் உருவாகின. டச்சு நீர்ச் சபை, இன்றும் செயற்படுகின்ற உலகின் சனநாயக நிறுவனங்களுள் மிகவும் பழையது எனக் கருதப்படுகின்றது.

நெதர்லாந்து வரைபடம். சிகப்புப் புள்ளிகள் மாகாணத் தலைநகரங்களையும், கரும்புள்ளிகள் மாநகரங்களையும் குறிக்கின்றன. ஆம்ஸ்டர்டாம், நாட்டுத் தலைநகரமாகவும், டென் ஹாக், நாட்டு அரசின் இருப்பிடமாகவும் இருக்கின்றன.
டென் ஹாக்கில் நெதர்லாந்து நாட்டு மாகாணங்களின் கொடிகள்
Dutch provinces by nominal GRP in 2016
Dutch provinces by nominal GRP per capita in 2016

மேற்கோள்கள்

  • Roy Bin Wong. China Transformed: Historical Change and the Limits of European Experience. Cornell University Press.
  1. http://www.ipo.nl/over-de-provincies/wist-u-dat
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.