நெதர்லாந்தின் இரண்டாம் வில்லியம்

வில்லியம் II (Willem Frederik George Lodewijk, anglicized as William Frederick George Louis; 6 டிசம்பர் 1792 – 17 மார்ச் 1849) ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் வழிவந்த இரண்டாவது நெதர்லாந்து அரசர் ஆவார். மேலும் தம் ஆட்சி காலத்தில் லக்ஸம்பர்க் பெருங்கோமானாகவும் லிம்பர்க் கோமானாகவும் இருந்தார்.[1][2][3][4][5][6][7] [8][9]

வில்லியம் II
வில்லியம் II
நெதர்லாந்து அரசர்

லக்ஸம்பர்க் பெருங்கோமான்

லிம்பர்க் கோமான்
ஆட்சிக்காலம் 7 அக்டோபர் 1840 – 17 மார்ச் 1849
பதவியேற்பு 28 நவம்பர் 1840
முன்னையவர் வில்லியம் I
பின்னையவர் வில்லியம் III
வாழ்க்கைத் துணை அன்னா பவ்லோவ்னா
வாரிசு
  • வில்லியம் III
  • இளவரசர் அலெக்சாண்டர்
  • இளவரசர் ஹென்றி
  • இளவரசர் எர்னிஸ்ட் கேசிமிர்
  • இளவரசி சோப்பி
குடும்பம் ஆரஞ்சு நஸ்ஸாவ்
தந்தை வில்லியம் I
தாய் வில்ஹெல்மின்
பிறப்பு திசம்பர் 6, 1792(1792-12-06)
Noordeinde Palace, டென் ஹாக், இடச்சுக் குடியரசு
இறப்பு 17 மார்ச்சு 1849(1849-03-17) (அகவை 56)
Tilburg, நெதர்லாந்து
சமயம் Dutch Reformed Church

இரண்டாம் வில்லியம் பிரஷ்யாவின் வில்ஹெல்மின் மற்றும் நெதர்லாந்தின் முதலாம் வில்லியதின் மகனாவார். 1815 ஆம் ஆண்டு முதலாம் வில்லியம் நாட்டை கைப்பற்றி தன் முடியாட்சிக்கு கீழ் கொண்டுவந்தார். இதனால் இரண்டாம் வில்லியம் ஆரஞ்சு இல்லத்தின் இளவரசராகவும், நாட்டின் அரச வாரிசாகவுமனார். 1840 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் நாள் நாட்டின் முடியாட்சியை கைப்பற்றி அரசரானார். இவரது ஆட்சிக்காலத்தில் நெதர்லாந்து பாராளுமன்ற மக்களாட்சியாக புதிய அரசியலமைப்பு உருவானது. வில்லியம் ரஷ்யா நாட்டின் அண்ணா பாவ்லோவ்னவை மணந்தார். அவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகளும் பிறந்தனர். இவர் மார்ச்சு 17, 1849 ஆம் ஆண்டு இறந்தார். இவரின் மகன் மூன்றாம் வில்லியம் அரசரானார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.