நெடுங்குழு 11 தனிமங்கள்

11 ஆவது தொகுதி தனிமங்கள் (Group 11 Element) என்பவை தனிம வரிசை அட்டவணையின் 11 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களைக் குறிக்கும்[1]. தாமிரம் (Cu), வெள்ளி (Ag) , தங்கம் (Au), இரோயன்ட்கெனியம் (Rg) ஆகிய தனிமங்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளன. தொல் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதால் இவ்வுலோகங்கள் நாணய உலோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இரோயன்ட்கெனியம் தனிமமும் இந்த குழுவுடன் அட்டவணையில் வைக்கப்படுகிறது, இருப்பினும் இந்த குழுவிலுள்ள இதர கன உலோகங்கள் போல இதுவும் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த எந்த இரசாயன பரிசோதனையும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. முதல் மூன்று தனிமங்களும் இயற்கையில் தோன்றுகின்றன [2]. தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம் முதலியன் தனிமநிலையிலேயே இயற்கையில் கிடைக்கின்றன.

நெடுங்குழு 11
 கிடை வரிசை
4
29
Cu
5
47
Ag
6
79
Au
7 111
Rg

வரலாறு

தொல் பழங்காலத்திற்கு முன்பிருந்தே இரோயன்ட்கெனியம் தவிர பிற தனிமங்கள் நன்கு அறியப்பட்டிருந்தன. இவை அனைத்தும் தனிம நிலையிலேயே இயற்கையில் கிடைத்தன. இவற்றை பிரித்தெடுக்கும் உலோகவியல் மிகவும் அவசியாகிறது.

பண்புகள்

மற்ற குழுக்களைப் போலவே, இந்த குடும்பத்தின் தனிமங்களும் எலெக்ட்ரானின் கட்டமைப்பில், குறிப்பாக வெளிப்புற வட்டப்பாதைகளில் உள்ள இனைதிறன் கூட்டில் ஒரே எண்ணிக்கையிலான எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன. ஒத்த இணைதிறனைப் பெற்றுள்ளன. இதனால் ஒத்த வேதிப்பண்புகளையும் பெற்றுள்ளன. உருகுநிலை, கொதிநிலை, அடர்த்தி போன்ற இயற்பியல் பண்புகளில் சிராக மாறுபடுகின்றன. நான்காவதாக இடம்பெற்றுள்ள இரோயன்ட்கெனியம் மட்டும் விதிவிலக்காக உள்ளது.

Zதனிமம்எலக்ட்ரான்களின் எண்ணிக்கை]]
29cதாமிரம்2, 8, 18, 1
47வெள்ளி2, 8, 18, 18, 1
79தங்கம்2, 8, 18, 32, 18, 1
111இரோயன்ட்கெனியம்2, 8, 18, 32, 32, 17, 2 (முன்கனிப்பு)

11 ஆவது குழுவின் அனைத்து தனிமங்களும் ஒப்பீட்டளவில் மந்தமாக வினைபுரியக் கூடியவை ஆகும். அனைத்தும் அரிப்புத் தடுப்பிகளாகவும் உள்ளன. தாமிரம் தங்கமும் நிறங்கொண்ட தனிமங்கள் ஆகும். இவை அனைத்தும் மின் தடையை குறைவாகத் தருவதால் மின் கம்பிகளில் பயன்படுத்தப்படுகின்றன. தாமிரம் மிகவும் விலை குறைவானதாகவும் பரவலாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. தங்கமும், வெள்ளியும் ஒருங்கிணைந்த உள் சுற்றுகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி முலாம் பூசப்பட்ட தாமிரக் கம்பிகள் சில சிறப்புக் கருவிகளில் பயன்படுகின்றன.

தோற்றம்

சிலிம் சீனா, மெக்சிகோ, உருசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தாமிரம் அதன் இயற்கைத் தோற்றத்திலேயே கிடைக்கிறது. தாமிர பைரைடுகள் (CuFeS2), குப்ரைட் (Cu2O), மாலகைட்டு (Cu(OH)2CuCO3), காப்பர் கிளான்சு (Cu2S), அசூரைட்டு (Cu(OH)22CuCO3) உள்ளிட்டவை தாமிரத்தின் தாதுக்களாகும்.

தாமிர பைரைட்டு மிகமுக்கியமான தாமிரத் தாதுவாகும். உலக தாமிர உற்பத்தியில் கிட்டத்தட்ட 76% தாமிரம் இத்தாதுவிலிருந்தே எடுக்கப்படுகிறது.

வெள்ளியும் தங்கத்துடன் ஒரு கலப்புலோகமாக எலக்ட்ரம் என்ற பெயரில் இயற்கையில் தனித்துக் கிடைக்கிறது. கந்தகம், ஆர்சனிக், ஆன்டிமணி, ஆகிய தனிமங்களின் தாதுக்களுடன் கலந்து காணப்படுகிறது. ஆர்ன் வெள்ளி மற்றும் பைரார்கைட்டு (Ag3SbS3), குளோரார்கைட்டு (AgCl), அர்செண்டைட்டு (Ag2S) போன்றவை வெள்ளியின் தாதுக்களாகும். பார்கசு செயல்முறையில் வெள்ளி தயாரிக்கப்படுகிறது.

பயன்பாடுகள்

இந்தக் குழுவைச் சேர்ந்த உலோகங்கள், குறிப்பாக வெள்ளி அதனுடைய நாணய அல்லது அலங்கார மதிப்புகளைத் தாண்டி வெளியேயும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு அவசியம் தரும் அசாதாரண பண்புகள் கொண்டதாக இருக்கிறது. இவை அனைத்தும் அற்புதமான மின்கடத்தும் உலோகங்களாகும். அதிக அளவில் மின்சாரத்தைக் கடத்தும் உலோகங்கள் வரிசையை வெள்ளி, செம்பு மற்றும் தங்கம் என்று வரிசைப்படுத்தலாம். வெள்ளி ஒரு நல்ல வெப்பம் கடத்தும் உலோகமாகவும் ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டதாகவும் உள்ளது. வெள்ளியின் மீது உருவாகும் வெள்ளியை ஒளி மங்கச் செய்யும் படலமும் நன்றாக மின்சாரத்தைக் கடத்துவதாக உள்ளது.

மின் கம்பி மற்றும் மின் சுற்றுகளில் தாமிரம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி மற்றும் தங்கம் போன்ரவை மின் பயன்கள் மட்டுமின்றி அலங்காரப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன. வெள்ளி தனிமம் விவசாயம் மருந்து, புகைப்பட வேதியியலிலும் பயன்படுத்தப்படுகிறது.

தங்கம், வெள்ளி மற்றும் செப்பு ஆகிய மூன்றும் மிகவும் மென்மையான உலோகங்களாகும், இதனால் நாணயங்களாக அன்றாட பயன்பாட்டில் எளிதில் சேதமடைகின்றன. பிற உலோகங்களுடன் கலப்புலோகமாகப் பயன்படுத்தப்பட்டு உறுதியான நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. Fluck, E. (1988). "New Notations in the Periodic Table". Pure Appl. Chem. (IUPAC) 60 (3): 431–436. doi:10.1351/pac198860030431. http://www.iupac.org/publications/pac/1988/pdf/6003x0431.pdf. பார்த்த நாள்: 24 March 2012.
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.