நுண்பாசி

நுண்பாசிகள் (microphyte) அல்லது நுண்தாவரங்கள் நுண்நோக்கியைக் கொண்டு காணக்கூடிய பாசிகளாகும். பாசிகள் பெரும்பாலும் நீர்விரும்பிகள். இவை நன்னீர் மற்றும் கடல்நீரில் பரவி வாழ்கின்றன. இவைகளில் மெய்க்கருவுயிரிகளான பாசிகள் மட்டுமல்லாது, நிலைக்கருவிலிகளான நீலப்பச்சைப்பாக்டீரியா/பாசிகளும் இடம் பெறுகின்றன. இந்நுண்பாசிகளின் பயன்கள் மிகவும் அதிகம். இவை பெரும்பலும் மிதவைவாழிகளாகவே வாழ்கின்றன.

உருவப்பண்புகள்

இவை ஒரு கல உயிரியாகவும் பல கல உயிரியாகவும் வாழ்கின்றன. இவை உருளை வடிவிலும், வடிவங்களற்றும், சங்கிலிகள், கொத்துக்களாகவும் தோற்றங்கள் உடையன. கலங்களின் அளவு 10-50μm களாக இருக்கின்றன.

ஒருகல பாசி

ஒருகல பாசியானது உருளைகளாக இருக்கும், - குளோரெல்லா, குளோரோகாக்கம் ஆகிய பச்சைப்பாசிகளும், குருவோகாக்கசு, கிளியோகாப்சா ஆகிய நீலப்பச்சைப்பாசிகளும் இதில் அடங்கும்.

இரு தட்டு மூடப்பட்டதுப்போல உள்ள நாவிக்குலா, ஐசோக்ரைசிச் ஆகிய ஈரணுப்பாசிகள்/இருகலப்பாசி எனப்படும். டையாட்டம்கள் - பழுப்புப்பாசிகளாகும். இது வட்ட வடிவிலும், நீண்டகுச்சிகளைப்போலவும் காணப்படுகின்றன.

கிளமைடோமோனாசு, டுனெலியெல்லா ஆகியன உருவங்களை வரையறுக்கமுடியாமல் உருவமாற்றிகளாகவும் இருக்கின்றன.

பலசெல்பாசி

பல செல் பாசிகளாணது சங்கிலி அமைப்புகளிலும் - ஸ்கெலெடொனீமா, ச்பைரோகைரா ஆகியன, குழுக்களாக வோல்வாக்சு, மைக்ரோசிச்டிசு ஆகியன.

வகைப்பாடு

இதன் வகைப்பாடு அதன் நிறத்தையும் அது சாரும் பேரினத்தையும் கொண்டு பிரிக்கப்படும். ஒன்று மெய்க்கருவுயிரிப் பாசிகள் மற்றொன்று நிலைக்கருவிலிப் பாசிகளாகும்.

மெய்கருவுயிரிப் பாசி

பழுப்புபாசி, பச்சைப்பாசி, இராப்பியணிப்பாசி - குளோரெல்லா, ஐசோக்ரைசிச் மற்றும் இராப்பிமோனாடுகள்.

நிலைக்கருவிலிப் பாசி

நீலப்பச்சைப்பாசி - அனபெனா, கல்பாசிகள்

சிறப்பியல்புகள்

பாசிப்படர்ச்சி என்னும் ப்ளும் உருவாதலில் முக்கியப் பங்கு. கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தி புவிவெப்பமடைதலில் இருந்து பெரிதும் மீளமைக்கிறது. மண்ணின் ஊட்ட சுழற்சியில் பெரும் பங்காற்றுகிறது.

  • நுண்புஞ்சைகளுடன் கூட்டுவாழ்க்கை - கல்பாசி, மூத்தவிலங்கிகளுடன் கூட்டுவாழ்வினால் அவைகள் ஆழ்கடலில் உணவு பெற உதவுகிறது.
  • பச்சைப்பாசி, தாவரங்களுடன் கூட்டுவாழ்க்கை - பெரணியான அசோல்லாவும் அனபெனாவும் ஆகியன. நீர்வாழ் உயிரினத்தின் அடிப்படை உணவு - சிப்பிநத்தைகள்

பயன்கள்

  • ஊட்டச்சத்து - ச்பைருலினா; ஆர்த்திரோச்பைரா
  • நிறமிகள் - அச்டாசாந்தின் - எமடோகாகசு ப்ளுவியாலிசு
  • கரோட்டினாய்டுகள் - டுனேலியெல்லா
  • உயிரி எரிபொருள் - உயிரிநீரிய உற்பத்தி; உயிரெரிவாகனநெய் உற்பத்தி - குளோரெல்லா
  • மாசுக்கட்டுப்பாடு - பச்சைப்பாசிகள் - கரியமிலவளி குறைத்தல்
  • உணவுகள் - மீன்வளர்ப்பில் உணவுகள் - ச்கெளிடோனிமா, ஐசோக்ரைசிச், டெட்ராசெல்மிச் ஆகியன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.