நீல்சு என்றிக்கு ஏபெல்

நீல்சு என்றிக்கு ஏபெல் (Niels Henrik Abel, ஆகத்து 5, 1802 – ஏப்ரல் 6, 1829) நோர்வீசிய கணிதவியலாளர் ஆவார். இவர் பல்வேறு துறைகளிலும் முன்னோடியாக பங்களித்துள்ளார். விகிதமுறா மூலங்களின் பொது ஐந்துபடிச்சமன்பாட்டிற்கு தீர்வு காண்பது இயலாதவொன்று என்பதற்கு முதன்முதலில் முழுமையான சான்றளித்தது இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக கருதப்படுகின்றது. அவரது காலத்தில் இதுவே 250 ஆண்டுகளாக தீர்க்கப்படாத, முதன்மையான கணிதச் சிக்கலாகவும் இருந்து வந்தது. நீள்வட்டச்சார்பு, ஏபெல் சார்புகளை கண்டறிந்தவர். இத்தகைய சாதனைகள் புரிந்திருந்தாலும் அவரது வாழ்நாளில் ஏபெல் அங்கீகாரம் எதனையும் பெறவில்லை. மிகவும் வறியநிலையில் வாழ்ந்து கொண்டு தமது கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார். 26 அகவையிலேயே மறைந்தார்.

நீல்ஸ் ஹென்றிக் ஏபெல்
நீல்சு என்றிக்கு ஏபெல்
பிறப்புஆகத்து 5, 1802(1802-08-05)
நெட்சுட்ராண்டு, நோர்வே
இறப்பு6 ஏப்ரல் 1829(1829-04-06) (அகவை 26)
பிரோலாந்து, நோர்வே
வாழிடம்நோர்வே
தேசியம்நோர்வே
துறைகணிதம்
கல்வி கற்ற இடங்கள்வேந்திய பிரெடெரிக் பல்கலைக்கழகம் (இளங்கலை, 1822)
Academic advisorsபெர்ன்ட் மைக்கேல் ஓம்போ
அறியப்படுவதுஏபலின் ஈருறுப்புத் தேற்றம்
Abelian category
Abelian variety
Abel equation
Abel equation of the first kind
Abelian extension
ஏபெல் சார்பு
பரிமாற்றுக் குலம்
Abel's identity
Abel's inequality
Abel's irreducibility theorem
Abel–Jacobi map
Abel–Plana formula
Abel–Ruffini theorem
Abelian means
Abel's summation formula
Abelian and tauberian theorems
Abel's test
Abel's theorem
Abel transform
Abel transformation
Abelian variety
Abelian variety of CM-type
Dual abelian variety
கையொப்பம்

தன் வாழ்நாளில் ஆறேழு ஆண்டுகளிலேயே பெரும்பாலானப் பணிகளை முடித்தார்.[1] இவரைக் குறித்தது பிரான்சியக் கணிதவியலாளர் ஹெர்மைட் கூறுகையில்: "ஏபெல் ஐந்நூறு ஆண்டுகளுக்கான வேலையை கணிதவியலாளர்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[1][2] மற்றொரு பிரான்சியக் கணிதவியலாளர், அத்ரியன்-மாரி லெஜாந்தர், கூறுகையில்: "கெல் தெத் செல் து ஷென் நோர்வீஜியன்!" ("இளம் நோர்வீசியருக்கு எத்தகைய தலை!") என வியந்தார்.[3]

இவற்றையும் காண்க

மேற்சான்றுகள்

நூற்றொகை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.