நீல நிலவு
நீல நிலவு (blue moon) என்று வழமையான மாத இடைவெளியில் வராத முழு நிலவு ஆகும். பெரும்பாலான ஆண்டுகளில் மாதமொன்றுக்கு ஒன்றாக பனிரெண்டு முழுநிலவுகள் வருவது இயல்பு. ஆனால் ஒவ்வொரு ஆண்டிலும் 12 சுழற்சிகளைத் தவிர பதினொரு நாட்கள் மீதமிருக்கும். இந்த கூடுதல் நாட்கள் ஒன்றிணைந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை (சராசரியாக 2.7154 ஆண்டுகள்)[1]) ஒரு கூடுதல் முழுநிலவு இடம்பெறும். இந்த கூடுதல் முழுநிலவு ஆங்கிலத்தில் "புளூ மூன் (நீல நிலவு)" என வழங்கப்படுகிறது.
சமய நிகழ்வுகள் முழுநிலவினை ஒட்டி கொண்டாடப்படும்போது இந்த கூடுதல் நிலவினைக் குறிக்க இந்தப் பெயர் வழங்கப்படலாயிற்று. இந்திய நாட்காட்டிகளில் இந்த வழக்கம் காணப்படவில்லை.
கிருத்துவ சமயகுருக்கள் உயிர்த்த ஞாயிறு நாளினை ஒட்டிய புனித மாதத்தை (Lent ) உதவும் முழுநிலவு மிக முன்னதாக வந்துவிட்டால் அதனை துரோகி நிலவு எனப் பொருள்பட (belewe moon)என அழைத்தனர். இதுவே மருவி புளூ மூன் என்று வழங்கப்படலாயிற்று எனவும் கூறுவர். தற்கால பயன்பாட்டில் கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு நீல நிலவு என்று வழங்கப்படுகிறது.[2]
புளூ மூன் என்ற சொல் ஆங்கில இலக்கியத்தில் வெகு அருமையாக நிகழும் நிகழ்வுகளைக் குறிக்க நீலநிலவிற் கொருமுறை("once in a blue moon") என்ற மரபுச் சொல் எழுந்தது இது தமிழில் உள்ள அத்தி பூத்தார்போல என்ற சொல்லுக்கு இணையானது.
இந்நாளன்று நிலவு நீல நிறத்தில் இருக்காது. 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழும் முழுநிலவு ஓர் நீலநிலவாகும்.இம்மாதத்தில் திசம்பர் 2 அன்று ஏற்கனவே முழு நிலவு வந்துள்ளது.
நாட்காட்டி
- 2009: டிசம்பர் 2, டிசம்பர் 31 [மேற்கத்திய நாடுகளில் UTC+05.]
- 2010: ஜனவரி 1 , [கீழை நாடுகளில் UTC+04:30.]
- 2010: மார்ச் 1, மார்ச் 30,[கீழை நாடுகளில் UTC+07]
- 2012: ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 31, [மேற்கத்திய நாடுகளில் UTC+08]
- 2015: ஜூலை 2, ஜூலை 31
இதனையும் பார்க்க
மேற்கோள்கள்
- Oxford English Dictionary
- http://www.google.com.au/search?q=(once+in+a+blue+moon)^-1
- Sinnott, Roger W., Donald W. Olson, and Richard Tresch Fienberg (May 1999). "What's a Blue Moon?". Sky & Telescope. பார்த்த நாள் 2008-02-09. "The trendy definition of "blue Moon" as the second full Moon in a month is a mistake."
புற இணைப்புகள்
- What is a Blue Moon? by Michael Myers
- Folklore of the Blue Moon by Philip Hiscock
- What's a Blue Moon? by Donald W. Olson, Richard T. Fienberg, and Roger W. Sinnott - Sky & Telescope
- Once in a Blue Moon - What is a blue moon? by Ann-Marie Imbornoni
- Topical Words - Blue Moon
- Blue Moon: Folklore or fakelore? by Pip Wilson
- A Blue Moon Calculator by David Harper
- On Blue Moons by Kevin Clarke
- Article arguing that a blue moon is the 3rd full moon in a season of 4 blue moons, not the 2nd in a month
- Blue Moon by Irineu Gomes Varella (Portuguese)
- 'Blue moon' coming to our skies soon
- Blue Moon - what's the real definition? by David Harper and Lynne Marie Stockman