நீரில் மூழ்குதல்

நீரில் மூழ்கினால் நீந்தத் தெரிந்தால் மாத்திரம் நீரில் மூழ்கியவரைக் காப்பாற்ற முயற்சி செய்யவும். எக்காரணம் கொண்டும் ஒரு உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு இரண்டு உயிரைப் பலிகொடுக்கக்கூடாது. ஒரு கயிறு அல்லது துணி அல்லது வேறேதேனும் முறையில் (எடுத்துக்காட்டாக உதவிக்குவருமாறு சத்தமிட்டுக் கத்தியோ முயற்சிசெய்யவும் ஆபத்தான இடத்தில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்யவும். நீரில் மூழ்கியவரைக் கரைக்குக் கொண்டுவந்ததும் எக்காரணம் கொண்டும் வயிற்றழுத்தம் கொடுக்கவேண்டாம். கூடுதலாக நீர் குடித்திருந்தால் வாந்தியாகவோ சிறுநீராகவோ படிப்படியாக வெளியேறிக் கொள்ளும். வயிற்றழுத்தம் கொடுப்பதன் மூலம் உட்புறக் குருதிப் பெருக்கு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கலாம். தவறுதலாக வயிற்றழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று வைத்திய ஆலோசனையைப் பெற்ற பின்னரே நோயாளியை வீட்டிற்குக் கொண்டுசெல்லலாம்.

முதலுதவி

  • சுயநினைவு இருக்கின்றதா எனப் பார்க்கவும்
  • சுவாசம் இருக்கின்றதா எனப்பார்க்கவும்.
  • சுவாசம் இருந்தால் (சுயநினைவு இருப்பவர்களையும் சேர்த்து) மீளுயிர்ப்பு நிலைக்குக் (Recovery Position) கொண்டுசெல்லவும். இங்கு மீளுயிர்ப்பு நிலை என்பது குடித்த தண்ணீர் வெளியேறும் வண்ணம் தலையைத் தாழ்த்தி உடலை ஒரளவு உயர்த்தி குடித்த நீர் வெளியில் வந்தாலும் சுவாசம் தடைப்படா நிலையில் ஆளைப் பிரட்டி வைப்பதாகும்.
  • சுயநினைவும் இல்லை சுயநினைவும் இல்லை என்றால் சுயநினைவு வரும்வரை அல்லது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லும் வரை மீளுயிர்புச் சுவாசம் (CPR)) வழங்கவும். நீரில் மூழ்கியவர் மீளுயிர்ப்புச் சுவாசம் மூலம் சுயநினைவு திரும்பினால் அவரை மீளுயிர்ப்பு நிலைக்குக் கொண்டுவரவும்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.