நில அளவியல்

நில அளவியல் (Surveying) என்பது ஒரு கலை சார்ந்த அறிவியல் தொழில்நுட்பம் ஆகும். ஒரு கிடைமட்ட புவிசார் அளவில் இருந்து மற்ற இடங்களின் கிடைமட்ட நீளம் மற்றும் உயர வித்தியாசங்களை கணக்கிடும் அறிவியலாகும். இந் நில அளவியல் மூலம் முற்காலத்தில் ஸ்டோன்ஹென்ஞ் கட்டப்பட்டது.[1][2]

நில அளவை கீழ்கண்டவாறு இரண்டு முறைகள் பயன்படுத்தபடுகின்றது. அவையாவன,

  1. தரைமட்ட நில அளவை (Plane Survey)
  2. புவிப்பெரும் பரப்பு நில அளவை (Geodetic Survey)

தரைமட்ட நில அளவை

இம்முறையில் அளக்கப்படும் அளவு முறையில் புவியின் கோள வடிவத்தைக் கணக்கில் எடுத்துகொள்வதில்லை. மேலும் இம்முறை குறைந்த நிலப்பரப்பை அளப்பதற்காகப் பயன்படுத்தபடுகின்றது. குறிப்பாக 250 சதுர கி மீ க்கு குறைவான பகுதியை அளப்பதற்காக இம்முறை பயன்படுத்தப்படுகின்றது. இம்முறையில் புவியின் கோள வடிவத்தை நேர் கிடைமட்டக் கோடாகக் கருதி, அதற்காக கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகின்றது,

  • 18.25 கி மீ க்கு 0.1 மீ
  • 53.30 கி மீ க்கு 0.3 மீ
  • 91.00 கி மீ க்கு 0.5 மீ

வீதம் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் புவியின் கோள வடிவத்திற்கும், கிடைமட்ட கோட்டிற்கும் இடைப்பட்ட கோண அளவு 195.5 கி மீ க்கு ஒரு விநாடி என்று யூகிக்கப் படுகின்றது.

புவிப்பெரும் பரப்பு நில அளவை

இம்முறையில் அளக்கப்படும் நில அளவையானது புவியின் கோள வடிவத்தினை கணக்கிடப்படுகின்றது. இம்முறை திரிகோண நில அளவை (Trigonometric Survey) என்றும் அழைக்கப்படுகின்றது. இம்முறை மற்ற முறைகளை காட்டிலும் துல்லியமானதாகும். 250 சதுர கி மீ க்கு அதிகமான நிலப்பரப்பை அளப்பதற்கு இம்முறை பயன்படுத்தபடுகின்றது.

மேற்கோள்கள்

  1. Johnson, Anthony, Solving Stonehenge: The New Key to an Ancient Enigma. (Thames & Hudson, 2008) ISBN 978-0-500-05155-9
  2. Hong-Sen Yan & Marco Ceccarelli (2009), International Symposium on History of Machines and Mechanisms: Proceedings of HMM 2008, Springer, p. 107, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4020-9484-1
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.