நிறப்பிரிகை

நிறப்பிரிகை (dispersion) எனப்படுவது வெண்ணிறமாகத் தென்படும் ஒளி அதன் உட்கூறாக அமைந்துள்ள ஒளியலைகள் பல நிறங்களாகப் பிரியும் நிகழ்வு. பகல் (சூரிய) ஒளி ஒரு முப்பட்டகத்தின் வழியே புகுந்து செல்லும் போது ஏழு குழுக்களான நிறங்களாகப் பிரிவதை நாம் அறிவோம். நிறங்களின் அணிவகுப்பு VIBGYOR என்ற நினைவுச்சொற்றொடர் (mnemonic) மூலம் அறியப்படுகிறது; உண்மையில், முதலில் கிடைக்கும் நிறம் சிவப்பு (Red), இறுதியில் தான் ஊதா (Violet) கிடைக்கின்றது.

சூரிய ஒளி (வெள்ளொளி) ஒரு கண்ணாடிமுப்பட்டகத்தின் வழியே செல்லும் போது ஏழு நிறங்களாகப் பிரிவதைக் காணலாம்.

நிறப்பிரிகை ஏற்படுவது ஏன்?

  • வெண்ணிற ஒளியினுள் அடங்கிய ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அலைநீளம் λ அல்லது அலைநீள-அடுக்கம் உள்ளது.
    • காட்டாக, சிவப்பு என்று நாம் உணரும் நிற அலைகளின் அடுக்கம் 630–740 nm (நேனோமீட்டர்)[1], அளவாக இருக்கும்.
    • ஊதா நிறத்தின் அலைநீள-அடுக்கம் குறைந்ததாக (சிறுமமாக) இருக்கும்[2]. (அதாவது, 380-450 nm)
  • முப்பட்டக ஊடகமான கண்ணாடியில், ஒவ்வொரு அலைநீள ஒளியும் ஒவ்வொரு வேகத்தில் செல்லும்.
    • சிவப்பு நிற ஒளியின் வேகம் அதிக அளவாக இருக்கும் (பெருமம்), ஊதாவின் வேகம் சிறிதாக (சிறுமம்) இருக்கும்; மற்ற நிறங்கள் இடைப்பட்ட விரைவுகளில் செல்லும்[3]
  • வேகம் வேறுபடுவதால் ஒளிவிலகல் அளவும் வேறுபடும். குறிப்பாகச் சொன்னால், ஒளிவிலகல் எண் மாறுபடும்.
    • அதிக வேகம் - குறைந்த அளவு ஒளிவிலகல் எண்; குறைந்த வேகம் - அதிகளவு ஒளிவிலகல் எண்.
    • எனவே, சிவப்பின் ஒளிவிலகல் குறைவாகவும் ஊதாவின் ஒளிவிலகல் அதிகமாகவும் இருக்கும் (Blue Bends Best)[2].

இவற்றையும் காண்க

சுட்டுகள்

  1. போரென்
  2. வெபாப்சு
  3. அமெரிக்க ஆற்றல் துறை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.