நிர்மலா பெரியசாமி
நிர்மலா பெரியசாமி என்பவர் செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
குடும்பம்
இவர் கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பெரியசாமி என்கிற பி.எஸ்.என்.எல் ஊழியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் ஒரு மகன் உள்ளார்.[1]
தொலைக்காட்சியில்
இவர் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றினார். பொதிகை தொலைக்காட்சியில் ஏழு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.[1] பின்பு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி செய்தார்.[2]
அரசியல்
இவர் 2003 அக்டோபர் 28 ஆம் நாள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருடன் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அதிமுகவில் இணைந்தார்.[3] அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாரளாக அறியப்படுகிறார். இவர் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் போன்ற பல பதவிகள் வகித்தார்.[4]
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் அணியில் நிர்மலா பெரியசாமி இருந்தார்.[5][6]
ஆதாரங்கள்
- "'- Nirmala periyasamy slams solvathellam unmai Tv show". https://www.vikatan.com/ (29 December 2016).
- V, KRISHNAVENI (6 July 2017). "- Nirmala periyasamy rejects 'bigg boss' offer!". https://www.vikatan.com/.
- Dinamalar (28 October 2013). "அதிமுக.,வில் இணைந்த பாத்திமா பாபு - நிர்மலா பெரியசாமி!! - Fathima Babu - Nirmala Periyasamy joints in ADMK". தினமலர் - சினிமா.
- "- Nirmala Periyasamy Slams MK Stalin". https://www.vikatan.com/ (26 February 2016).
- R, JEYALAKSHMI (21 March 2017). "#VikatanExclusive - I will join another party, says Nirmala Periyasamy". https://www.vikatan.com/.
- "யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள்: நிர்மலா பெரியசாமி". இந்து தமிழ் திசை.