நிரலகம்

மென்பொருள் ஒன்றினை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் துணைநிரல்களினது சேகரம் (தொகுப்பு) நிரலகம் (Library) எனப்படுகிறது. நிரலகங்கள் பெரும்பாலும் துணை ஆணைத்தொடர்களையும் தரவுகளையும் தம்மகத்தே கொண்டிருக்கும். இவை தனித்தியங்கும் மென்பொருள் ஒன்றிற்கு தேவைப்படும் சேவைகளை வழங்கும்.

இசைச்செயலி ஒன்று libvorbisfile எனும் நிரலகத்தை பயன்படுத்தும் முறையினை விளக்கும் வரைபடம்

பெயரிடல்

வெவ்வேறு இயக்குதளங்கள், தத்தமக்கென தனித்தனியான நிரலகப் பெயரிடல் மரபினை கடைப்பிடிக்கின்றன. இப்பெயரிடலைக்கொண்டு இயக்குதளங்களில் உள்ள நிரலகங்களை பிரித்தறியலாம்.

க்னூ/லினக்ஸ் (Linux), சொலாரிஸ் (Solaris), யுனிக்ஸ் குடும்பம் மற்றும் பீ எஸ் டீ (BSD)

libfoo.a, libfoo.so போன்ற கோப்புக்கள் /lib, /usr/lib அல்லது /usr/local/lib/ ஆகிய அடைவுகளுள் வைத்திருக்கப்பட்டிருக்கும்.

கோப்புப்பெயர்கள் எப்போதும் lib என ஆரம்பிக்கும். கோப்புப்பெயரின் பின்னொட்டாக, a (.களஞ்சியங்கள், நிலையான நிரலகங்களுக்கு) அல்லது, .so (பகிரப்பட்டவை, இயங்குமுறையாக தொடுக்கப்பட்ட நிரலகங்களுக்கு) ஆகியவை அமையும். பெயர் பின்னொட்டுக்கு மேலதிகமாக இடைமுகப்பு எண் இடப்படக்கூடும். எடுத்துக்காட்டாக, libfoo.so.2 என்று பெயரிடப்பட்ட நிரலகமானது libfoo எனும் இயங்குமுறையாக தொடுக்கப்பட்ட நிரலகத்தின் இரண்டாவது பெரும் இடைமுகப்பு மாற்றமாகும். .la என்ற கோப்புப்பெயர் பின்னொட்டுடன் காணப்படும் நிரலகங்கள் libtool களஞ்சியங்களாகும்.

ஆப்பிள் மாக்கின்டோஷ்

வின்டோஸ் குடும்பம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.