நியூத்திரன் மட்டுப்படுத்தி

நியூத்திரன் மட்டுப்படுத்தி (neutron moderator) என்பது அணுக்கருவியலில், விரைவு நியூத்திரன்களின் வேகத்தைக் மட்டுப்படுத்தி அவற்றை அணு எரிபொருள் கொண்டு ஏற்பட்ட அணுக்கரு தொடர்வினையை தக்கவைக்கக்கூடிய வெப்ப நியூத்திரன்களாக மாற்றும் ஊடகங்களைக் குறிக்கும்.

பொதுவாக பயன்படுத்தப்படும் மட்டுப்படுத்திகள்: சாதாரண (மென்) நீர் (உலகின் ஏறத்தாழ 75% அணுஉலைகளில்), திட கிராஃபைட் (20% அணுஉலைகள்) மற்றும் கன நீர் (5% அணுஉலைகள்).[1] பெரிலியம் சில சோதனை அணுஉலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹைடிரோகார்பன்களும் வாய்ப்புள்ளவைகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தற்போது இயங்கும் அணுவாற்றல் உலைகள் - மட்டுப்படுத்திகளின்படி
மட்டுப்படுத்திஉலைகள்வடிவம்நாடு
இல்லை (விரைவு)1பிஎன்-600உருசியா (1)
கிராஃபைட்29மேம்பட்ட வளிமக் குளிர்வி அணுஉலை (AGR),
மாக்னோக்ஸ், RBMK
ஐக்கிய இராச்சியம் (18), உருசியா (11)
கன நீர்29காண்டுகனடா (17), தென் கொரியா (4), ருமானியா (2),
சீனா (2), இந்தியா (2), அர்ஜென்டீனா, பாக்கித்தான்
மென்னீர்359PWR, BWR27 நாடுகள்

மேற்கோள்கள்

  1. Miller, Jr., George Tyler (2002). Living in the Environment: Principles, Connections, and Solutions (12th Edition). Belmont: The Thomson Corporation. பக். 345. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-534-37697-5.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.