நிமாரி மாடு

நிமாரி மாடு (இந்தி:निमारि) என்பது இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும், இது மத்திய பிரதேசத்தின் தென்மேற்கு பகுதியான நிமாரி பிரதேசத்தில் தோன்றியது ஆகும். இந்த மாடு கிர் மாடு மற்றும் கிலரி மாடுகளிடமிருந்து தோன்றியதாக கருதப்படுகின்றன. இந்த மாடுகள் மத்திய பிரதேசத்தின் நர்மதை ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதியிலும் மகாராட்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்திலும் வாழ்கின்றன.[1][2]

நிமாரி காளை
நிமாரி பசு

இந்த மாடுகள் உழைப்பு மாடுகளாகும், இவை மிதமான அளவு பால்தரக்கூடியன. இவை நடுத்தர அளவு முதல் பெரிய அளவுவரை உள்ளனவாகவும், ஆக்கிரமிப்பு குணம் கொண்டவையாகவும் இருக்கின்றன. [3][4] பொதுவாக இந்த மாடுகள் சிவப்பு நிறத்திலும், ஆங்காங்கே வெள்ளை நிற திட்டுக்களுடன் காணப்படும். இவற்றின் உடல் அமைப்பு நேரானதாகவும், நீண்டதாகவும் இருக்கும். காதுகள் தொங்காமல், தடிமனாக இருக்கும். இவற்றின் குளம்புகள் வலுவானதாகவும், நேரானதாகவும் இருக்கும்.

மேற்கோள்கள்

  1. "Cattle Biodiversity of India". Vishwagou. பார்த்த நாள் 15 May 2015.
  2. "Conservation of Madhya Pradesh Native Breeds of Cattle". பார்த்த நாள் 15 May 2015.
  3. "Breeds of Livestock - Nimari Cattle". Ansi.okstate.edu. பார்த்த நாள் 2009-12-11.
  4. "Cattle Biodiversity of India". Vishwagou. பார்த்த நாள் 15 May 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.