நினைவிழத்தல்

தட்டினால் கிள்ளினால் அல்லது கூப்பிட்டாலும் விழிக்க முடியாத நிலை. கார்ட்டெக்ஸ் இயக்கங்கள் குறைவதால் மூளையின் சகல பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் மையமாகிய தலாமஸில் செயல் குறைதல்.

நினைவிழத்தல்

மயக்க மருந்துகள் இரண்டு வழிகளில் புகட்டப்படுகின்றன. சுவாசம் வழியாக (Isoflurane) புகட்டுவது ஒரு வழி, மற்றது இரத்தம் வழியாக (Propofol) வழங்குவது. இரண்டும் தற்காலிக கோமாநிலையையே (Pharmacological coma)வழங்குகின்றன. மருந்து தண்டுவடத்தில் செயல்படும்போது கைகால் அசைவு முடக்கமடைகிறது. சுயநினைவு இழப்பு எப்படி ஏற்படுகின்றது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. சுயநினைவு எதனால் ஏற்படுகின்றது என்பதே நமக்கு முதலில் தெரியாததால் இதைக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமில்லை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.