நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்
நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக் (Nikolay Stepanovich Chernykh) (உருசியம்: Николай Степанович Черных) (அக்தோபர் 6, 1931- மே 26, 2004) ஒரு சோவியத் ஒன்றிய வானியலாளரும் உருசிய வானியலாளரும் ஆவார்.
இவர் உசுமான் எனும் உருசிய நகரில் பிறந்தார் இது அன்றைய வொரோனேழ் ஒப்லாசுத்திலும் இன்றைய இலிபெத்சுக் ஒப்லாசுத்திலும் உள்லது. இவர் வானியலிலும் சூரியக் குடும்ப சிறு வான்பொருள்களின் இயக்கவியலிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார், இவர் 1963 முதல் உக்கிரைனில் உள்ள கிரீமிய வானியற்பியல் காணகத்தில் பனிபுரிந்தார்.
இவர் இரண்டு பருவமுறை வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார். அவை 74பி/சுமிர்னோவா செர்னிக், 101பி/செர்னிக் என்பனவாகும்.இவர் ஏராளமான குறுங்கோள்களைக் கண்டுபிடிதுள்ளார். இவற்றில் குறிப்பாக 2867 சுட்டின்சும் திரோயான் குறுங்கோள் 2207 அந்தெனாரும் அடங்கும். இவர் தன் மனைவி இலியூத்மிளா செர்னிக்குடன் (Людмила Ивановна Черных) பணிபுரிந்துள்ளார். குறுங்கோள் 2325 செர்னிக் 1979 இல் செக் வானியலாலர் அந்தோனின் மிர்கோசு அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு இவர்கள் பெயர் இடப்பட்டது.[1]
கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோள்கள்
1 எல்.ஐ. செர்னிக் உடன்
2 எல்.ஜி. கராச்கினா உடன்
3 பிரையான் ஜி, மார்சுடென்உடன்
மேற்கோள்கள்
- Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names (5th ). New York: Springer Verlag. பக். 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-00238-3. http://books.google.com/books?q=2325+Chernykh+1979.
வெளி இணைப்புகள்
- (உருசிய மொழியில்) 40 Years of Discovering Asteroids at the Wayback Machine (archived சூலை 24, 2011). - An appreciation of the Work of N. S. Chernykh (in Russian)
1796 இரிகா | மே 16, 1966 |
1836 கொமரோவ் | ஜூலைJuly 26, 1971 |
1907 உருத்னேவா | செப்டம்பர் 11, 1972 |
1908 பொபேதா | செப்டம்பர் 11, 1972 |
2004 இலெக்செல் | செப்டம்பர் 22, 1973 |
2006 பொலோன்சுகாயா | செப்டம்பர் 22, 1973 |
2036 செராகுல் | செப்டம்பர் 22, 1973 |
2113எகிரித்னி | செப்டம்பர் 11, 1972 |
2123 விதாவா | செப்டம்பர் 22, 1973 |
2149 சுவாம்பிரானியா | மார்ச்சு 22, 1977 |
2164 இலயால்யா | செப்டம்பர் 11, 1972 |
2178 கசாக்சுதானியா | செப்டம்பர் 11, 1972 |
2190 கவுபெர்த்தின் | ஏப்பிரல் 2, 1976 |
2206 கப்ரோவா | ஏப்பிரல் 1, 1976 |
2207 அந்தெனார் | ஆகத்துt 19, 1977 |
2208 புழ்சுகின் | ஆகத்து 22, 1977 |
2222 இலெர்ம்ந்தோவ் | செப்டம்பர் 19, 1977 |
2228 சொயூசு-அப்பொல்லோ | ஜூலை 19, 1977 |