நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்

நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன் (Cogito ergo sum, ஒலிப்பெயர்ப்பு: "கொஜிட்டோ இர்கோ சும்"; /ˈkɡ[invalid input: 'i-']t ˈɜːrɡ ˈsʊm/, அல்லது /ˈkɒɡ[invalid input: 'i-']t/, /ˈsʌm/; பண்டைய இலத்தீன்: ˈkoːɡitoː ˈɛrɡoː ˈsʊm; ஆங்கிலம்:I think, therefore I am அல்லது சிறப்பாக ஆங்கிலம்:I am thinking, therefore I exist, நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்.) என்பது ரெனே டேக்கார்ட் என்ற மெய்யியலாளரின் மெய்யியல் கருத்துரை ஆகும். "நான்" இருப்பதால் சிந்திக்க முடிகிறது என்ற கூற்றானது ஒருவருடைய இருத்தலை அல்லது தன் இருப்பை அத்தாட்சிப்படுத்துகிறது என்ற இலகுவான அர்த்தத்தை வழங்குகிறது. அல்லது டேக்கார்ட் விபரிப்பதன்படி, "நாம் சந்தேகித்துக் கொண்டே நாம் இருக்கிறோமா என்பதை சந்தேகிக்க முடியாது."

இக் கருத்துரை எல்லா அறிவின் ஓர் அடிப்படைக்கும் புரிந்துகொள்ளல் வடிவத்தை வழங்கியதால் இது மேற்கத்தைய மெய்யியலில் அடிப்படை மூலக்கூறாகியது.[1] கற்பனை, ஏமாற்றுதல் மற்றும் தவறு போன்ற பொய்யாக ஏனைய அறிவு இருக்கும்போது, ஒருவருடைய சொந்த இருப்பின் உண்மையின் அத்தாட்சியாக தன் இருப்பைப்பற்றியே சந்தேகித்தல் அல்லது சிந்தித்தல் சிறந்த செயல் ஆகும்.

அறிஞர்களைவிட தன் நாட்டவர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் இலத்தீனில் எழுதுவதைத் தவிர்த்து பிரான்சிய மொழியில் அவர் எழுதிய "முறையின் விளக்கவுரை" (1637) je pense, donc je suis (French pronunciation: [ʒə pɑ̃s dɔ̃k ʒə sɥi]) என்ற டேக்கார்ட்டின் உண்மையான கூற்றைக் கொண்டுள்ளது.[2] இவர் "Cogito ergo sum" (கொஜிட்டோ இர்கோ சும்) என்ற இலத்தீன் கூற்றை "மெய்யியலின் கொள்கைகள்" (1644) என்ற நூலின் பயன்படுத்தினார்.

ஆங்கிலம் பேசுவோரிடத்தில் இவ்விவாதம் "the cogito ergo sum argument" (கொஜிட்டோ இர்கோ சும் விவாதம்) அல்லது சுருக்கமாக "the cogito" (கொஜிட்டோ) என பிரபல்யமாக அறியப்படுகிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.