நேசோ

நேசோ, பகாமாசு நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள் தொகை 248,948 ஆகும். இது பகாமாசு நாட்டின் மக்கள் தொகையில் 70% ஆகும். இந்நகரம் நியூ புரொவிடென்சு தீவில் அமைந்துள்ளது.

நேசோ நகரம்
நேசோவுக்கு நல்வரவு
குறிக்கோளுரை: Forward, Upward, Onward, Together
நாடு பஹமாஸ்
தீவு நியூ புரொவிடென்சு
மீளக்கட்டமைக்கப்பட்டது1695
பரப்பளவு
  மொத்தம்207
மக்கள்தொகை (2010)
  மொத்தம்2,48,948
  அடர்த்தி1
  பெருநகர் அடர்த்தி1,203
நேர வலயம்EST (ஒசநே−5)
  கோடை (பசேநே)EDT (ஒசநே−4)
தொலைபேசி குறியீடு242

வரலாறு

இந்நகரின் முன்னைய பெயர் சார்லசு நகரம் ஆகும். இது 1684 இல் எசுப்பானியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. 1695 இல் இந்நகரம் மீளக்கட்டியெழுப்பப்பட்ட போது நேசோ எனப் பெயர் சூட்டப்பெற்றது.

புவியியல்

இந்நகரம் அமைந்துள்ள நியூ புரொவிடென்சு தீவு ஏறத்தாழ 200 சதுரகிலோமீட்டர் பரப்புடைய பெரும்பாலும் சமதரையான நிலவமைப்பைக் கொண்டுள்ளது. தீவின் மத்தியில் ஆழம் குறைந்த பல ஏரிகள் காணப்படுகின்றன. உலர் காலநிலையைக் கொண்டிருப்பதாலும் அமெரிக்காவிற்கு அண்மையாக இருப்பதாலும் இது ஒரு பிரபல சுற்றுலா நகரமாக விளங்குகின்றது.

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.