நாஸ்டாக்

நாஸ்டாக் (NASDAQ - National Association of Securities Dealers Automated Quotations) ஓர் அமெரிக்க பங்குச்சந்தை. 3,200 நிறுவனங்கள் உள்ளிட்ட இச்சந்தை உலகில் வணிக மூலதனத்தின் (market capitalization) படி உலகில் இரண்டாமிடத்திலுள்ள பங்குச் சந்தை ஆகும். 1971இல் உருவாக்கப்பட்ட இச்சந்தை அமெரிக்காவின் முதல் மின் சந்தை ஆகும். இதில் வர்த்தகங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரில் நடைபெறும். இது 1992 ஆம் ஆண்டில் இலண்டன் பங்குச் சந்தையுடன் இணைந்து கண்டங்களுக்கிடையேயான பங்குச் சந்தை வர்த்தகத்தையும் தொடங்கியது. இதன் வணிக நேரமானது கிழக்குப்பகுதி நேரத்தின்படி (Eastern Time Zone) காலை 09:30 முதல் மாலை 05:00 மணி வரை ஆகும். இப்பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4.45 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[1]

நாஸ்டாக்

மேற்கோள்கள்

  1. World-exchanges.org Archived பெப்ரவரி 13, 2011 at WebCite
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.