நாகராஜ் மஞ்சுளே

நாகராஜ் மஞ்சுளே (மராட்டி: नागराज मंजुळे) என்பவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஃபன்ட்ரி என்ற மராட்டித் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். இவர் மராட்டியில் எழுதிய 'உன்ஹாச்யா கடாவிருத்த' என்ற பாடல்தொகுப்புக்கு தமாணி சாகித்திய விருது கிடைத்தது.

இந்தியாவின் 61வது தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ஃபன்ட்ரி என்ற திரைப்படத்துக்காக, சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.[1]

இவர் இயக்கிய பிஸ்துல்யா என்ற குறும்படமே தேசிய அளவிலான விருதைப் பெற்றது. ஃபண்ட்ரி என்ற திரைப்படத்துக்காக பல்வேறு திரைத் திருவிழாக்களில் விருதுகளைப் பெற்றார். இவர் மகாராஷ்டிர மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார்.

வெற்றிப்படைப்பு

2016 ஆம் ஆண்டு இவர் இயக்கிய சைராட் என்ற மராத்தி மொழிப்படமானது வசூலில் கொடிகட்டி பறந்தது. இப்படத்தில் நடித்த ரிங்கு ராச்குரு 63வது திரைப்பட தேசிய விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[2]

திரைப் படைப்புகள்

  1. 2014: ஃபன்ட்ரி
  2. 2016: சைராட்

சான்றுகள்

  1. "61st National Film Awards For 2013". Directorate of Film Festivals (16 April 2014). பார்த்த நாள் 16 April 2014.
  2. National Awards: Rinku Rajguru from Nagraj Manjule’s Sairat gets a SPECIAL MENTION! May 3, 2016

இணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Nagraj Manjule

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.