நாக வழிபாடு

நாக வழிபாடு பண்டைய திராவிடர்களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் இந்து மற்றும் பௌத்த மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் ஆதி பர்வம் முதலான பண்டைய நூல்களிலும் நாகவடிவத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகக் கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டும் செய்திகளும் உள்ளன.

நாக இணைகளின் உருவச்சிலை
அனந்தசேசனில் விட்டுணு இலக்குமியுடன் ஓய்வெடுப்பது
நாக பிரதிஷ்டை, ராமேஸ்வரம்

முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன், ஆவி வழிபாட்டிற்கு பிறகு விலங்குகளை வழிபட தொடங்கினான். அவற்றில் பிற விலங்கு வழிபாடுகளை விடவும், நாக வழிபாடு பெரும் புகழ்பெற்றதாகும். சிவபெருமான் தனது கழுத்தில் வாசுகி என்ற பாம்பு ஆபரணமாகவும், பிற பாம்புகளை கைகளில் ஆபரணமாகவும் தரித்துள்ளார். திருமால் பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பினை படுக்கையாக வைத்துள்ளார். தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைந்து நடைபெறுகிறது.

சைவ சமயத்தில் நாக வழிபாடு

வைணவ சமயத்தில் நாக வழிபாடு

பாம்பு வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள்

  1. மலட்டுத் தன்மை நீங்கி மக்கட்பேறு உண்டாகும்
  2. வாழ்வில் வளம் பெருகும்
  3. நோய்கள் குணமாகும்
  4. இறந்த பின்பு உறவினர்களும், அரசர்களும் பாம்பாக மறுபிறவி எடுப்பார்கள்
  5. முன்னோர்கள் பலவித வியாதிகளை உண்டாக்குவார்கள் என்றும், அவற்றிலிருந்து விடுபடுவதற்காக பாம்பு அவசியம் என்று நம்புகிறார்கள்

நாகத்தின் பெயர்களைக் கொண்ட இறைவன்

  1. நாக ஆபரண விநாயகர்
  2. சர்ப்பபுரி ஈசுவரர்
  3. நாகநாதர்
  4. நாகேசுவரர்
  5. புற்றீசர்
  6. வன்மீக நாதர்

நாகத்தின் பெயர்களை கொண்ட தலங்கள்

  1. நாகர் கோயில்
  2. நாகப்பட்டினம்
  3. திருப்பாம்புரம்
  4. பாம்பணி
  5. காளத்தி

நாகம் தொடர்புடைய தமிழ் பெயர்கள்

  1. நாகராஜன்
  2. நாகப்பன்
  3. நாகமணி
  4. நாகரத்தினம்
  5. நாகலட்சுமி
  6. நாகம்மை
  7. நாகலிங்கம்
  8. நாககுமாரி
  9. நாககன்னி
  10. நாகநந்தினி
  11. நாகேஸ்வரன்

இவற்றையும் காண்க

ஆதாரம்

  • சைவப்புலவர். எஸ். தில்லைநாதன், மட்டக்களப்பில் இந்து கலாசாரம், முதல் பதிப்பு 2006, மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.