நவ்சாரி மாவட்டம்
நவ்சாரி மாவட்டம்,(Navsari) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. குஜராத் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இம்மாவட்ட்த் தலைமையிடம் நவ்சாரி நகரமாகும்.

குஜராத் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்கள்

15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்
மாவட்டப் பரப்பளவு 2,211 சதுர கிலோ மீட்டகள். சொராஷ்டிர சமயத்தை சார்ந்த பார்சி மக்கள் அதிகம் வாழும் மாவட்டம்.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கட்தொகை 1,330,711 ஆகும்.[1] .மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 602 நபர்கள். [1].பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 961 பெண்கள் என்ற அளவில் உள்ளனர். [1]. எழுத்தறிவு விகிதம் 84.78%.ஆக உள்ளது.[1]
வருவாய் வட்டங்கள்
- நவ்சாரி
- ஜலால்போர்
- காந்தேவி
- சிக்லி
- கேர்காம்
- பன்ஸ்தா
புகழ் பெற்றவர்கள்
- தாதாபாய் நௌரோஜி
- ஜம்செட்ஜி டாடா
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.