நரேந்திர சிங் நேகி

நரேந்திர சிங் நேகி (Narendra Singh Negi) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் கார்வால் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர். உத்தரகாண்டின் மக்களைப்பற்றியும், சமூகத்தைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் மற்றும் அரசியலைப் பற்றியும் புரிந்து கொள்ள புத்தகங்களைப் படிப்பதைவிட இவரது பாடல்களைக் கேட்டால் போதும் எனச் சொல்லுவர்.

நரேந்திர சிங் நேகி
பிறப்பு12 ஆகத்து 1949 (1949-08-12)
இந்தியா, உத்தராகண்டம்
தொழில்(கள்)நாட்டுப்புற பாடகர், இசையமைப்பாளர்

வாழ்க்கை

இவர் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.இவர் பாடல்களின் எண்ணிக்கையை விட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். கார்வாலி கீத்மாலா என்பது இவரது முதல் இசைத்தொகுதி ஆகும். உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பாடியுள்ளார்[1]. இவர் உத்தரகாண்ட் மக்களின் வாழ்வின் சுக, சோகங்களை இவரது பாட்டின் வழி பாடுவதால் இவரது பாடல்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.