நரம்பியல் காது கேளாத்தன்மை

காக்லியாவிற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளால் இது ஏற்படுகின்றது. காது கேளாத்தன்மை மரபியல் தொடர்புடையதாகவோ, நடுச்செவி திரவத்தினாலோ, மூளை உறை நோய் போன்ற கடும் தொற்று நோய்களாலோ,தலைக்காயம், தலையில் மாட்டும் ஃபோன்கள் மூலம் கனத்த சத்தமாகச் சங்கீதம் கேட்டல், இயந்திரங்களினால் மீண்டும் மீண்டும் ஏற்படும் கனமான ஒலியினைக் கேட்டல் ஆகியவற்றினால் ஏற்படலாம். கடத்தல் காது கேளாத்தன்மைக்கு பொதுவான காரணம், செவிக்குழாயைச் சார்ந்துள்ள தோலில் அமைந்துள்ள செருமினஸ் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் மெழுகினால், புறச்செவியானது அடைக்கப்படுதல் ஆகும். சிலருக்கு இந்த மெழுகானது கடினமாவதால், செவிப்பறையை அழுத்துகின்றது. பிரத்யேகமான உறிஞ்சு குழாய்கள் மூலம் இக்கடின மெழுகினை அகற்றுவதால், மீண்டும் கேட்கும் தன்மையினை அடையலாம். கடத்தல் காது கேளாத்தன்மைக்கு மற்றொரு காரணம் துளையுள்ள செவிப்பறையாகும். நடுச்செவியில் தொற்றல், (Infection) அருகாமையில் ஏற்படும் வெடிச்சத்தம் மற்றும் தலையில் திடீரேன அடிபடுவதால் ஏற்படும் இயக்கங்களினால் உண்டாகும் காயங்கள் ஆகியவை துளை ஏற்படக் காரணங்களாகும். தலையில் காயம் ஏற்படுதலால் நடுச்செவி எலும்புகள் துண்டிக்கப்பட்டு, காக்லியாவுடன் தொடர்பு விடுவிக்கப்படுகின்றது. அதிர்வலைகள் உட்செவிக்குத் திறம்பட கடத்தப்படினும், காக்லியா மற்றும் செவிநரம்பு பழுதடைதலால் கேளாத்தன்மை ஏற்படலாம். இவ்வகை காதுகேளாத்தன்மை உணர்நரம்பியல் காது கேளாத்தன்மை எனப்படும். தொற்றல், தலைக்காயம், வெடிச்சத்தம் மற்றும் கனத்த சத்தம் கேட்டல் ஆகியவை இந்நிலை காரணமாகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.