நடைப் பிரயாணம்

நடைப் பிரயாணம் (Hiking) என்பது நீண்ட தூரம் கால்நடையாக மேற்கொள்ளப்படும் பிரயாணம் ஆகும். இது பொதுவாக நாட்டுப்புறங்களில் இடம்பெறுகிறது. பல்வேறு நாடுகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக நடைப் பிரயாணத்தைத் தாம் சுற்றுலாவிற்கென வந்த இடத்தில் மேற்கொள்ள விரும்புவர். நடைப் பிரயாணத்தின் போது தமது முதுகில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய பையினை வைத்திருப்பது வழக்கமாகும். இதன் மூலம் பல மருத்துவ நன்மைகள் கிடைப்பதகக் கூறப்படுகின்றது.[1][2] அத்துடன், நடைப் பிரயாணம், சாரணியத்திலும் முக்கிய அம்சமாக விளங்குகிறது.

ஒரிகோன் நடைப்பிரயாணப் பாதை

மேற்கோள்கள்

  1. McKinney, John (2009-03-22). "For Good Health: Take a Hike!". Miller-McCune.
  2. "A Step in the Right Direction: The health benefits of hiking and trails". American Hiking Society. பார்த்த நாள் 1 June 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.