நகராக்கம்

நகர்ப்புறத் (urban) தன்மையின் அளவு அல்லது அதன் அதிகரிப்பு நகராக்கம் எனப்படுகின்றது. இது ஒரு குறிக்கப்பட்ட பகுதி குறைந்த நகர்ப்புற இயல்பைக் கொண்டிருந்து கூடிய நகர்ப்புற இயல்புடையதாக மாற்றம் பெறுவதைக் குறிக்கும் அதே நேரம், கூடிய நாட்டுப்புறத் (rural) தன்மைகளைக் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதி ஒரு நகர்ப்புறப் பகுதியுடன் இணக்கப்படுவதன் மூலம் நகர்ப்புறமாகக் கருதப்படுவதையும் குறிக்கும். பொதுவாக நகராக்கத்தை அளவிடும்போது மொத்தக் குடித்தொகையின் எத்தனை விழுக்காடு நகர்ப்புறப் பகுதிகளில் வாழுகின்றனர் என்று குறிப்பிடப் படுகின்றது. உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 2050 ஆம் ஆண்டில் நகரமயமாதலால் நகரங்களில் வசிப்பர் என ஒரு நிபுனர்க்குழு ஆராய்ச்சி கூறுகிறது.[1]

2012 ஆம் ஆண்டில் பல்வேறு நகரங்களின் நகரமயமாதல் சதவீதத்தைக் காட்டும் உலக நகரமயமாக்கல் வரைபடம்
12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நகரம் குவாங்ஜாவோ. 8 நகரங்களை உள்ளடக்கிய மாநகரமாக இது விளங்குகிறது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் மும்பை மேலும் உலகளவில் 4 வது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் இது விளங்குகிறது.இந்நகரத்தின் மக்கள் தொகை 20.5 மில்லியன் ஆகும்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "2050 ல் நகரமயமாதல்" (30 ஆகத்து 2014). பார்த்த நாள் 2 செப்டம்பர் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.