தோல் நோய்கள்
தோல் நோய் [1]என்பது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தொற்று நோயாகும். இது தோலின் மீது பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சரும வடுக்களாகவோ, வலியையோ அல்லது வலி இல்லாத பாதிப்பையோ ஏற்படுத்துகின்றன.
தோல் நோய்கள்
இந்த தோல் நோய்களின் தன்மையை பொருத்து இதை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்
தற்காலிக தோல் நோய்
இந்த வகை தோல் நோய்கள் கொஞ்சம் காலங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். உதாரணமாக தோலில் ஏற்படும் பருக்கள், படை, மருக்கள், நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகள், பாதப் புண்கள் போன்றவை.
நிரந்தர தோல் நோய்கள்
இந்த தோல் நோய்களை குணப்படுத்த இயலாது. ஆனால் கட்டுப்படுத்தலாம். இவை தோலின் மீது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக :ஊறல், மச்சம், மெலனோமா (தோல் புற்றுநோய்), சோரியாஸிஸ்(உரித்தோல் அழற்சி)
உள் தோல் நோய்கள்
இந்த வகை தோல் நோய்கள் தோலின் உட்புற சரும பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக :பிளவைக்கட்டி, உயிரணு அழற்சி.
தடுப்பு நடவடிக்கைகள்
கைகளை [2]அடிக்கடி வெதுவெதுப்பான நீரில் சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
தோல் நோய்த்தொற்றுகள் உள்ளவர்களிடம் நேரடித் தொடர்புகளை தவிர்க்கவும்
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்
சத்தான உணவை சாப்பிடுங்கள்.
- Nancy Garrick, Deputy Director (2017-04-20). "Skin Diseases" (en).
- "Skin Disorders: Pictures, Causes, Symptoms, Treatments, and Prevention" (en).