தோர்ச்யீ காண்டு

தோர்ச்யீ காண்டு அல்லது டோர்ஜீ காண்டு (Dorjee Khandu) (பிறப்பு மார்ச்சு 3, 1955, கியாங்கர் கிராமம்; இறப்பு: ஏப்ரல் 30 2011) ஒரு இந்திய அரசியல்வாதி. இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராகவும் இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவராகவும் இருந்தவர். ஏப்ரல் 9, 2007 அன்று கெகோங் அபாங்கிற்கு மாற்றாக அருணாச்சலப் பிரதேசத்தின் ஆறாவது முதலமைச்சராக பதவியேற்றார்[1]. 2009 ஆண்டு தேர்தல்களில் தனது கட்சிக்கு வெற்றி தேடித்தந்து மீண்டும் 25 அக்டோபர் 2009 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றார்.[2]

தோர்ச்யீ காண்டு
டோர்ஜீ காண்டு,
அருணாச்சலப் பிரதேச முதல்வர்
6வது அருணாச்சல முதலமைச்சர்
தொகுதி முக்தோ
பதவியில்
9 ஏப்ரல் 2007  30 ஏப்ரல் 2011
முன்னவர் கெகோங் அபாங்
பின்வந்தவர் ஜார்பம் காம்லின்
தனிநபர் தகவல்
பிறப்பு 3 மார்ச்சு 1955 (1955-03-03)
கியாங்கர் கிராமம், வட கிழக்கு எல்லை முகமை (முன்னாள் அருணாச்சல்)
இறப்பு 30 ஏப்ரல் 2011(2011-04-30) (அகவை 56)
லோபோதாங், தவாங் மாவட்டம், அருணாசலப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பணி அரசியல்வாதி

இவர் மோன்பா இனத்தைச் சேர்ந்தவர்[3]. மறைந்த லேகி டோர்ஜீயின் மகன். இவருக்கு நான்கு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். இந்தியப் படையின் உளவுத்துறையில் ஏழு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். வங்காள தேச விடுதலைப் போரின்போது இவராற்றிய உளவுப்பணிக்காக தங்கப் பதக்கம் பெற்றார். ஏப்ரல் 30, 2011ல் ஒரு உலங்கு வானூர்தி விபத்தில் ஷீலா-பள்ளத்தாக்கில் மரணமடைந்தார்.[4][5]

மேற்கோள்கள்

முன்னர்
கெகோங் அபாங்
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்
ஏப்ரல் 2007 முதல் ஏப்ரல் 2011
பின்னர்
ஜார்பம் காம்லின்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.