தோமஸ் முன்ரோ

மேஜர் ஜெனரல் சர் தோமஸ் முன்ரோ பிரபு (Sir Thomas Munro, 1st Baronet, மே 27, 1761சூலை 6, 1827) என்பவர் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ அதிகாரியும், இராசதந்திரியும் ஆவார். இவர் 1814 இல் இருந்து 1827 வரை சென்னை மாகாணத்தின் பிரித்தானிய ஆளுநராக இருந்தார். இவர் தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களால் முன்ரோல்ப்பா என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

Major-General
Sir Thomas Munro, Bt
KCB
Governor of Madras
பதவியில்
16 September 16, 1814  10 July 1827
தலைமை ஆளுநர் The Marquess of Hastings
The Earl Amhurst
முன்னவர் Sir George Barlow, Bt
பின்வந்தவர் Stephen Rumbold Lushington
தனிநபர் தகவல்
பிறப்பு 27 May 1761
கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து
இறப்பு 6 சூலை 1827(1827-07-06) (அகவை 65)
Pattikonda, British India[1]
தேசியம் British
படித்த கல்வி நிறுவனங்கள் University of Glasgow
விருதுகள் KCB
படைத்துறைப் பணி
பற்றிணைவு ஐக்கிய இராச்சியம்
கிளை Madras Army
பணி ஆண்டுகள் 1779-1827
தர வரிசை Major-General
சமர்கள்/போர்கள் இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்
மூன்றாவது ஆங்கில மைசூர் போர்
மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்

பிறப்பு

கிளாஸ்கோ நகரில் 27.05.1761 அன்று மன்றோ பிறந்தார். நான்கு சகோதரர்களையும் இரண்டு சகோதரிகளையும் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. தந்தை அலெக்ஸாண்டர் மன்றோ. தாய் மார்கரெட் ஸ்டார்க்.

வாழ்க்கை குறிப்பு

  • 1789 அவர் சென்னையில் உள்ள ஒரு காலாட்படையில் பயிற்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்
  • 1780-83 அவர் ஹைதர் அலிக்கு எதிரான போரில் பங்கேற்றார்
  • 1790-92 திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் பங்கேற்றார், பின்னர் பாரமால் பகுதியின் ராணுவ அதிகாரியாக ஏழு வருடம் பணியாற்றி வருவாய் ஆய்வு மற்றும் மதிப்பீடு கொள்கைகளை கற்றார்
  • 1800-1807 ஹைதராபாத் நிசாம் பகுதிக்களுக்கு பொறுப்பாளராக இருந்தார், பின்பு இங்கிலாந்து சென்றார்
  • 1814 இந்திய திரும்பிய அவர் நீதிதுறை மற்றும் காவல்துறை சீரமைப்பில் ஈடுபட்டார்
  • 1820ல் சென்னை, கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரால் நிறுவப்பட்ட வருவாய் மதிப்பீடு மற்றும் நிர்வாகத்தின் அமைப்புகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன

சிறப்பு

இவருக்கு சென்னையின் அண்ணா சாலையில் தீவுத் திடல் அருகே சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. சேணம் இல்லாத குதிரை மீது கம்பீரமாக மன்றோ அமர்ந்து இருக்கின்ற அந்தச் சிலையைச் செய்தவர் பிரான்சிஸ் சாண்டரி. அவர் ரயாட்வாரி நிலவரி அமைப்பின் தந்தை என கருதப்படுகிறார்.

தோமஸ் முன்ரோ சிலை

முக்கிய நிகழ்வுகள்

1800ல் பெல்லாரி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ஆக பணி புரியும் போது மதராஸ் அரசாங்கம் ராகவேந்திரர் மடத்திலிருந்தும் மற்றும் மந்த்ராலயத்திலிருந்தும் வரும் வருவாயை அரசுக்கு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அப்போது அது குறித்த விசாரணைக்காக அங்கு சென்ற போது ராகவேந்திரர் அவரிடம் பேசியதாகவும் அவருக்கு தீட்சை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் தனது அறிக்கையை மடத்திற்கு சாதகமாக வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.[2]. இந்த ஆணை இன்றும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் மந்த்ராலயத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நூல் மற்றும் வெளியிணைப்பு மேற்கோள்கள்

  • கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன்
  • எனது இந்தியா ( காட்டன் காட்டிய அக்கறை! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....[3]
  • கனவு நனவான கதை[4]

மேற்கோள்கள்

  1. Bradshaw, John (1893). Sir Thomas Munro and the British settlement of the Madras Presidency. London: Oxford University Press. பக். 210–212.
  2. http://www.hindu.com/thehindu/fr/2002/10/18/stories/2002101801350500.htm
  3. http://malaikakitham.blogspot.in/2012/10/blog-post_8624.html
  4. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20906:2012-08-22-17-40-52&catid=1505:2012&Itemid=749
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.