தொழிற்துறை வடிவமைப்பு

தொழில்துறை உற்பத்திப் பொருட்களின் அழகியல், பயன்படுதன்மை ஆகிய அம்சங்களை மேம்படுத்த உதவும், பயன்படுகலையே தொழில்துறை வடிவமைப்பு (Industrial design) எனலாம். ஒரு தொழில்துறை வடிவமைப்பாளர், குறிப்பிட்ட உற்பத்திப்பொருளின் தோற்றம், அப் பொருளின் கூறுகள் அமையும் இடங்கள், நிறம், மேற்பரப்புத் தோற்றம், ஒலி, அப்பொருளின் பயன்படுதன்மை குறித்த அம்சங்கள், மனித சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக இருக்கக்கூடிய அவற்றின் இயல்புகள் போன்றவற்றைத் தனது வடிவமைப்பில் கவனத்துக்கு எடுத்துக்கொள்வார். அத்துடன், அப்பொருளின் உற்பத்திச் செயல்முறை, மூலப்பொருட்கள் தெரிவு, பயனர்களுக்கு அப்பொருளை வழங்கும் முறை குறித்த அம்சங்களிலும் கவனம் செலுத்துவார்.

தொழில்துறை உற்பத்திப்பொருட்களின் உருவாக்கத்தில், வடிவமைப்பாளர்களை ஈடுபடுத்துவதனால், பொருளின் பயன்படுதன்மை மேம்பாடு அடைவதனாலும், உற்பத்திச் செலவு குறைவதனாலும், பொருட்கள் கவர்ச்சிகரமாக அமைவதனாலும், பொருள் அதிகப்படியான பெறுமதி உள்ளதாகின்றது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.