தொலைமனமுணர்தல்

தொலைமனமுணர்தல் (telepathy) என்பது, புலன் உறுப்புக்கள் எதையும் பயன்படுத்தாமலும், பௌதீகத் தொடர்புகள் இன்றியும், ஒருவருடைய மனத்தில் இருந்து இன்னொருவர் மனத்துக்குத் தகவல்கள் செலுத்தப்படுவது ஆகும். அதாவது, பேசுதல், கேட்டல், சைகை காட்டுதல், எழுதிக் காட்டுதல் போன்ற பல்வேறு வழமையான தொடர்பு முறைகளின் பயன்பாடு இல்லாமல் ஒருவர் எண்ணுவதை மற்றொருவர் அறிந்து கொள்வதே "தொலைமனமுணர்தல்" எனப்படுகிறது. அறிவியலாளர்கள் இதனை ஒரு உண்மையான தோற்றப்பாடாகக் கருதுவது இல்லை. தொலைமனமுணர்தல் என்னும் ஒன்று இருக்கிறதா என அறிந்துகொள்ளவும், அதைப் புரிந்துகொள்வதற்கும், பயன்படுத்துவதற்குமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாயினும், கட்டுப்பாடான சோதனைகளின் கீழ் இதை உண்மை என்று நிறுவுவதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை..[1][2]

தற்காலப் புனைகதைகளிலும், அறிவியற் புனைவுகளிலும் தொலைமனமுணர்தல் இடம்பெறுவதைக் காணலாம். இவற்றில், வேற்றுக்கோளினரும், மீவியல்பு நாயகர்களும் இத்தகைய ஆற்றல்களைக் கொண்டவர்களாகக் காட்டப்படுவது உண்டு.

குறிப்புக்கள்

  1. Jan Dalkvist (1994). Telepathic group communication of emotions as a function of belief in telepathy. Dept. of Psychology, Stockholm University. http://books.google.com/books?id=lhsRAQAAIAAJ. பார்த்த நாள்: 5 October 2011.
  2. Willem B. Drees (28 November 1998). Religion, Science and Naturalism. Cambridge University Press. பக். 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-64562-1. http://books.google.com/books?id=BxmcHWCv2c4C&pg=PA242. பார்த்த நாள்: 5 October 2011.

இவற்றையும் பார்க்கவும்

  • தொலைவியக்கல்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.