தொன்மக் கதை

தொன்மக் கதைகள் என்பது பழங்காலத்தில் இருந்து வழங்கிவரும் கதைகளாகும். சில தொன்மக் கதைகள் உண்மைச் சம்பவங்கள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்தாலும், காலப்போக்கில் அவை பல்வேறு திரிபுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு அந்த உண்மைச் சம்பவங்கள் நோக்கிய விடயத் தகவல்கள் அரிதாகி போவதுண்டு. மகாவலிபுரத்தில் இருந்ததாக க்கூறப்படும் ஏழு கோயில்கள் பற்றய கதைகளை இந்த வகைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. [1]

பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காகப் புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவை மனிதர்களால் புனையப்பட்ட அல்லது கற்பனை செய்யப்பட்ட கதைகள். தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்று நிகழ்வுகளை பின்புலமாக வைத்து அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வனையும் சிலப்பதிகாரத்துடன் இந்த வகையில் ஒப்பிட்டு மேற்கூறிய கருத்தை மேலும் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாகத் தொன்மக் கதைகளில் மீவியற்கைச் சம்பவங்கள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றைத் தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். இப்படியான கதைகளுக்கு பைபிள் , பைபிள் கதைகள் ஆகியவை எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

தொன்மக் கதைகளும் வரலாற்று நிகழ்வுகளும்

பழங்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை கதை வழியாகவே நாம் இன்று அறியக்கூடியதாக உள்ளது. அப்படியான தொன்மக் கதைகளை நாம் இலக்கியத் தொன்மக் கதைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். இன்று இந்த வேறுபடுத்தல் சற்று சிக்கலாகவே இருக்கின்றது. எடுத்துக்காட்டாக குமரிக்கண்டம் நோக்கிய கதையாடல்களில் இந்தக் கருத்துக் குழப்பம் உண்டு.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Lost city found off Indian coast - BBC
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.