தொகைச்சொல்
முக்கனி என்பது தொகைச்சொல் எனப்படும். தொகை என்னும் சொல்லுக்கு தொகுத்தல் என்பது பொருள்.
கனிகளுள் எவற்றை முக்கனி எனக் குறிப்பிடுகிறோம்?
சில தொகைச்சொற்களை விரித்துக் காண்போம்.
தொகை | விரி |
---|---|
இருவினை | நல்வினை, தீவினை; தன்வினை, பிறவினை |
இருதிணை | உயர்திணை, அஃறிணை; அகத்திணை, புறத்திணை |
முத்தமிழ் | இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் |
முப்பால் | அறம், பொருள், இன்பம் |
மூவிடம் | தன்மை, முன்னிலை, படர்க்கை |
மூவேந்தர் | சேரன், சோழன், பாண்டியன் |
நாற்றிசை | கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு |
நானிலம் | குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் |
ஐந்திணை | குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை |
ஐம்பால் | ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின் |
முக்கொடி | வில் அம்பு, மீன், புலி |
நான்மறை | ரிக், யசூர், சாம, அதர்வண |
ஐம்பொறி | மெய், வாய், மூக்கு, கண், செவி |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.