தேனிரும்பு

தேனிரும்பு (Wrought iron) எஃகை விட குறைந்த கரி சேர்ந்த இரும்பு கலவை மாழை ஆகும். தேனிரும்பைத் தயாரிக்கையில் நார்த்தன்மையுடைய கசடுகள் அதில் சிக்குண்டு உள்ளதே இதன் சிறப்பியல்பாகும். இதனால் தேனிரும்பை பொறிக்கும் போதும் உடைக்குமளவில் வளைக்கும்போதும் மரத்தைப் போன்றே "வரிகள்" உடன் காணப்படுகிறது. இது வலு மிக்கதாகவும், தகடாக்கத் தக்கதாகவம் நீட்டக் கூடியதாகவும் எளிதாக பற்ற வைக்கக் கூடியதாகவும் உள்ளது. வரலாற்றில், இதுவே மிகவும் தூய்மையான இரும்பாக "நல்லிரும்பு" என அறியப்பட்டது;[1][2] இருப்பினும், தற்போதைய சீர்தரங்கள் கரிமச் சேர்க்கை 0.008 wt%க்கும் கீழாக இருக்க வரையறுப்பதால் இதனை தூய இரும்பாகக் கொள்ள இயலாது.[3][4]

பாரிசிலுள்ள ஈஃபெல் கோபுரம் தேனிரும்பின் ஒரு வகையான துழாவுலை இரும்பினால் கட்டப்பட்டது
தில்லியிலுள்ள இரும்புத் தூண் 98% தேனிரும்பினால் ஆனது

இரும்புத் தயாரிக்கும் முறைகள் மேம்படுத்தும் முன்னர் தேனிரும்பே மிகவும் வழக்கத்திலிருந்த தகடாக்கக்கூடிய இரும்பாக இருந்தது. தேனிரும்பிலிருந்தே வாள்கள், உணவுக் கத்திகள், உளிகள், கோடாரிகள் மற்றும் பிற கூர்மையான கருவிகளைத் தயாரிக்கத் தேவையான எஃகு பெறப்பட்டது. போர்க்கப்பல்களிலும் தொடர்வண்டிகளிலும் பயன்படுத்தப்பட்டதால் இதன் தேவை 1860களில் உச்சத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து விட்டது.

தேனிரும்பைக் கொண்டு தறையாணிகள், ஆணிகள், கம்பிகள், சங்கிலிகள், தண்டவாளங்கள், தொடர்வண்டி பெட்டியிணைப்புகள், நீர் மற்றும் நாராவிக் குழாய்கள், மரையாணிகள், திருகாணிகள், குதிரை இலாடங்கள், கைப்பிடிகள், அலங்கார அறைகலன்கள் ஆகியன தயாரிக்கப்பட்டன.[5]

தற்போது வணிகரீதியாக தேனிரும்பு தயாரிக்கப்படுவதில்லை. தேனிரும்பால் தயாரிக்கப்பட்டவையாக கூறப்படும் காப்பு சட்டங்கள், பூங்கா நாற்காலிகள் [6] மற்றும் இரும்புக் கதவுகள் மென் உருக்கால் தயாரிக்கப்படுகின்றன.[7] இருப்பினும் அவை கை வேலைபாடுகளுடன் இருப்பதால் ஆங்கிலத்தில் ராட் (வேலை செய்த) அயர்ன் என்றே அழைக்கப்படுகின்றன.[8]

மேற்கோள்கள்

  1. Imhoff, Wallace G. (1917), "Puddle Cinder as a Blast Furnace Iron Ore", Journal of the Clevelp[oihougohohpjand Engineering Society 9 (621.76): 332, http://books.google.com/?id=OA_OAAAAMAAJ.
  2. Scoffern, John (1869), The useful metals and their alloys (5th ), Houlston & Wright, p. 6, http://books.google.com/?id=4Ik1AAAAMAAJ.
  3. McArthur, Hugh; Spalding, Duncan (2004), Engineering materials science: properties, uses, degradation and remediation, Horwood Publishing, p. 338, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-898563-11-2, http://books.google.com/?id=7dwAaOqp69wC.
  4. Campbell, Flake C. (2008), Elements of Metallurgy and Engineering Alloys, ASM International, p. 154, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87170-867-0, http://books.google.com/?id=6VdROgeQ5M8C.
  5. Gordon, Robert B (1996), American Iron 1607-1900, Baltimore and London: Johns Hopkins University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-6816-5
  6. "Wrought Iron: A Patio Furniture dream". cnet reviews. http://www.patioset.com/Wrought_Iron_Patio_Sets/. பார்த்த நாள்: 2009-09-29.
  7. Daniel, Todd (May 3, 1997), Clearing the Confusion Over Wrought Iron, http://www.artmetal.com/project/NOMMA/WROUGHT.HTM, பார்த்த நாள்: 2008-01-05
  8. Daniel, Todd (May 3, 1997), Clearing the Confusion Over Wrought Iron, http://www.artmetal.com/project/NOMMA/WROUGHT.HTM, retrieved 2008-01-05

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.