தெலுன் போல்தக்
தெலுன் போல்தக் என்பது மங்கோலியாவின் கென்டீ மாகாணத்தில் ததல் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு தளமாகும். இது செங்கிஸ் கான் பிறந்த இடம் என்று கருதப்படுகிறது. இது மங்கோலிய நாட்டுப்புறக் கதைகளில் அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு மங்கோலியர்களிடையே ஒரு புனிதமான புகழ் உண்டு. இது ஒரு கிராமப்புறப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி முழுவதும் சிறு பட்டணங்களாலும், கிராமங்களாலும் ஆனதாகும். இங்கு 1962ல் ஒரு பெரிய செங்கிஸ் கானின் சிலை அவரது 800வது பிறந்தநாளின்போது எழுப்பப்பட்டது.[1]
தளத்தில் ஓவூ மற்றும் நினைவுச் சின்னம்
உசாத்துணை
- "Eastern Mongolia". www.discovermongolia.mn. பார்த்த நாள் 20 March 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.