தூங்கெயில் கதவம்

தூங்கு எயில் கதவம் என்பது சங்ககாலத்தில் வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு.

சங்ககாலக் கட்டடக்கலை

எயில் என்னும் சொல் கோட்டையைக் குறிக்கும். தூங்குதல் என்னும் சொல் சங்ககாலத்தில் தொங்குதலைக் குறிக்கும். எயிலின் கதவம் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. எயிற்கதவத்தைத் திறக்கும்படி, ஐயவி என்னும் கணையமரத் தாழ் இட்டு அமைப்பதுதான் வழக்கம். இந்தக் கோட்டையை அமைத்த அரசன் மடவுள் அஞ்சி இதன் கதவைத் தொங்கும்படி அமைத்திருந்தான். இக்காலத்தில் மேலே சுருண்டுகொள்ளும் கதவை அமைக்கிறோம். இந்தத் தூங்கெயிற்கதவம் வாயிலின் இருபுற எயில் பிடிப்பில் ஏறி இறங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. கதவு மேலே ஏறி நிற்கும்போது எப்படித் தோன்றும் என்று எண்ணிப் பாருங்கள். வானத்தில் தொங்குவது போலத்தானே தோன்றும். எனவே வானத்து இழைத்த கதவு என்று அதனைக் குறிப்பிட்டனர்.

கடவுள் அஞ்சி கட்டியது

இதனைக் கட்டியவன் கடவுள் அஞ்சி என்னும் அரசன். இந்தக் கோட்டைக்குள் வண்டன் என்பவனின் செல்வம் இருந்தது. இந்தக் கோட்டையைச் செல்வத்துக்கு உடைமையாளியான வண்டன் என்பவனே பாதுகாத்துவந்தான்.

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம்.

அடிப்படைச் சான்று

கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்
வெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன்

- காப்பியாற்றுக் காப்பியனார் - பதிற்றுப்பத்து 31

செம்பியன் எறிந்தது

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஒரு சோழ மன்னன். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான்.

அடிப்படைச் சான்று

  • நத்தத்தனார் பாடல் சிறுபாணாற்றுப்படை அடி 79 முதல்

ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச் சுவல் சொறியும்
தூங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தை

  • நப்பசலையார் பாடல் புறநானூறு 39

சார்தல்
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்

படத்தில் தோன்றுவது பாபிலோன் தொங்கு தோட்டம்
இக்காலத் தூங்கெயில் வகை

ஒப்பீடு

கி.மு. 1867-ல் ஈராக் நாட்டில் கட்டப்பட்டிருந்த தொங்கு தோட்டம் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது. இந்தத் தோட்டத்தை அங்கு பாயும் யூப்ரட்டீஸ், டைக்ரீஸ் ஆறுகள் மூழ்கடித்தன.

இணைத்துப் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.