துளிம மறைப்பியல்
துளிம மறைப்பியல் (Quantum cryptography) என்பது மறைப்பிக்கும் காரியங்களை செயல்படுத்தவோ அல்லது மறைத்த கட்டமைப்பை திறக்கவோ துளிம இயக்கவியல் விளைவுகளைப் பயன்படுத்துதல் ஆகும்.
துளிம மறைப்பியலைக் கொண்டு பத்திரமானதொரு தெரிவிப்புத் தொடர்புகளை (secure communication network) உருவாக்க முடியும் என அண்மையில் வெளியான இலூடுவிக்கு மேக்சிமிலிஅன்சு பல்கலைக்கழகத்தின் (Ludwig Maximilians University) இயற்பியலாளர் செபாசுட்டியன் நெளரெத் (Sebastian Nauerth) அவர்களின் ஆய்வு தெரிவிக்கின்றது. மார்சு 31 நேச்சர் போட்டோனிக்சில் (Nature Photonics) வெளியான இந்த அறிக்கையில், மணிக்கு 300 கி.மீ-இல் பறக்கும் வானூர்தியில் இருந்து ஒளியன்களை (photons) அனுப்பினர் என்றும் அதன் ஒளிக்கற்றை மீது உடைக்கமுடியாத ஒரு மறையீட்டுத் திறவியை (encryption key) நிறுவினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது[1][2].