பிட்

பிட் அல்லது துணுக்கு என்பது கணினி மற்றும் தொலைதொடர்பு இயலின் அடிப்படை தகவல் அளவு கோல். எந்த ஒரு கருவி வெறும் இரண்டு நிலையை (binary state) வைத்து இயங்குமோ அங்கு மட்டுமே இந்த பிட் அளவுகோல் பயன்படுத்தமுடியும். உதரணத்திற்கு கணினி, லக்கமுறை சுற்றுபலகை ( டிஜிட்டல் சிர்கிட் போர்டு ) உபயோகிக்கும் கருவிகளில் இந்த முறையான தகவல் சேமிப்பை உபயோகிக்கலாம். ஒரு பிட் என்பது 'பூஜ்யம்' ( 0 - zero ) அல்லது 'ஒன்று' ( 1 - one ) என்ற என்னை குறிக்கும். இது ரும கணக்கீடு ( binary arithmetic) முறையை சார்ந்தது ஆகும். இதை நிலைமாற்றி ( switch ) என்றும் சொல்லுவார்கள் ( 0 அல்லது 1 ).

இந்த பிட் எனப்படும் அளவுகோல் கணினி உலகில் ரூப என் எனவும் குறிபிடுவர்கள். அதே போல இதனை ஏரண மதிப்பு அ.த மெய் ,பொய் ( logical value ) போலவும் பயன்படுத்துவார்கள், அதுபோல செயற்பாடு நிலைபோலவும் ( Activation State ) அதாவது on / off போல உபயோகிபர்ர்கள்.

பல வடிவங்கள்

பிட்டை பல வடிவங்களில் உபயோகிகிரர்கள். பைடு ( 8 பிட் = 1துண்டு - byte ) , கிலோ பைடு ( 1024 பிட் = 1 கிலோ பைடு) , மெகா பைடு ( 1024 கிலோ பைடு = 1 மெகா பைடு ). கணினி தகவலை ஒரு குழுவாக செயல்படுத்தும். பெரும்பாலும் உபயோகிக்க கூடிய சில குழுக்கள்: அரை பைடு ( nibble ) , பைடு (byte), வார்த்தை ( word = 16 பிட் , 32 பிட் , 64 பிட் )

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.