துட்டன்காமன்

துட்டன்காமூன் அல்லது தூத்தான்காமூன் (Tutankhamun, கிமு 1341 – கிமு 1323) என்பவன் பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் ஆவான். இவன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை புதிய இராச்சியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனான். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் துட்டன்காட்டன் என்பதாகும். துட்டன்காமூன் என்பதன் பொருள் "ஆமனின் உயிருள்ள படிமம்" என்பதாகும்[1]. இவனது பெயர் எகிப்திய மொழியில் தூத்து-அன்கு-ஆமூன் என்பது ஆகும். கிப்திய (Coptic) மொழியில் அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ஆமூன் என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது.

துட்டன்காமன்
பிறப்புAmarna
இறப்புமெம்பிசு

1922 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் துட்டன்காமூனின் சமாதியைக் கண்டுபிடித்தார்.

பண்டைய எகிப்தை ஆண்ட துட்டன்காமூன் இரும்பு விண்கல்லால் ஆன கத்தியைப் பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[2][3]

மரணத்தின் காரணம்

2005 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் துட்டன்காமனின் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அக்காயம் தேரோட்டம் அல்லது குதிரையோற்றம் போன்ற நிகழ்வுகளின் போது ஏற்பட்ட விபத்தாயிருக்கலாம் என்று கருதப்பட்டது. 2010 ஆண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் துட்டன்காமன் மரணமடையும் போது மிக ஆபத்தான மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.