துடிவிண்மீன்

துடிவிண்மீன் அல்லது பல்சர் (pulsar) என்பது காந்தப்புலம் செறிந்த, மின்காந்த கதிர்வீச்சை கீற்றாக வெளியிடும், சுழலும் நொதுமி விண்மீனாகும்[1]. இதன் பெயர் துடிக்கும் விண்மீண் என்பதன் சுருக்கம். இவ்விண்மீன் சுழன்றபடி கீற்றாக மின்காந்த அலைகளை வீசியடிப்ப்பதால் பூமியிலிருந்து பார்க்கும்போது அவ் மின்காந்த அலைகள் விட்டுவிட்டு துடிப்பாக தோன்றும் (கலங்கரை விளக்கின் ஒளிவீச்சு மாதிரி). நொதுமி விண்மீன்கள் மிகவும் அடர்த்தியானவை, குறுகிய சுழட்சிக்காலத்தை கொண்டவை. இதனால் இவற்றின் துடிப்புகளுக்கிடையேயான இடைவெளி மிகவும் துல்லியமானது. துடிவிண்மீனைப்பெருத்து இவ் இடைவெளி மில்லிசெக்கன் முதல் செக்கன் வரையில் இருக்கும்.

வேலா துடிவிண்மீன் (Vela pulsar) வெளிப்படுத்தும் துடிப்பலைகள், 89.33 மில்லி நொடிகளுக்கு ஒரு தடவை காம கதிர் (gamma ray) துடிப்புகளை சீராக வெளியிடுகிறது.

இவற்றின் துல்லியமான துடிப்பு வானியலில் மிகவும் பயனுள்ளது. உதாரணமாக இரும துடிவிண்மீன் தொகுதியொன்றின் மீது மேற்கொண்ட அவதானிப்பு ஈர்ப்பு அலை இருப்பதை மறைமுகமாக உறுதிசெய்ய உதவியது[2]. சூரிய மண்டலத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் PSR B1257+12 துடிவிண்மீனுக்கு அருகிலாகும்[3]. சில துடிவிண்மீன்களின் துடிப்பின் துல்லியம் அணுக் கடிகாரத்திற்கு ஒப்பானவை.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.