திறந்த மெய்நிகர் வடிவமைப்பு

திறந்த மெய்நிகர் வடிவமைப்பு (Open Virtualization Format, OVF) - என்பது மெய்நிகர் கணினிகளில் (Virtual machines) இயங்கும் மெய்நிகர் உபகரணங்களை (virtual appliance) தொகுப்பது மற்றும் விநியோகிப்பதற்கான (Packaging and distrbution) ஒரு திறந்த தரநிலை (Open standard) ஆகும்.

இந்த தர நிலை, மெய்நிகர் கணினி மென்பொருள் தொகுப்பு மற்றும் மென்பொருள் விநியோகத்திற்கான "திறந்த பாதுகாப்பான, சிறிய, திறமையான மற்றும் நீட்டகூடிய" வடிவத்தை விவரிக்கிறது.

திறந்த மெய்நிகர் வடிவமைப்பு எந்த ஒரு குறிப்பிட்ட மெய்நிகராக்கி (hypervisor) அல்லது செயலி கட்டமைப்பு (Processor Architecture)- உடன் கட்டுப்பட்டதல்ல. திறந்த மெய்நிகர் வடிவமைப்பு தொகுப்பானது (OVF Package), ஒரு மெய்நிகர் கணினியில் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெய்நிகர் உபகரணங்களை கொண்டிருக்கும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.