திர்ரேனியக் கடல்
திர்ரேனியக் கடல் அல்லது டெரீனியன் கடல் (Tyrrhenian Sea) (French: Mer Tyrrhénienne, இத்தாலியம்: Mar Tirreno) இத்தாலியின் மேற்குக் கடற்கரையில் உள்ள மத்தியத் தரைக்கடலின் ஒரு பிரிவு. இது ஐரோப்பாவில் வடக்கிலும் மேற்கிலும் கோர்சு மற்றும் சார்தீனியா தீவுகளாலும், கிழக்கில் இத்தாலிய மூவலந்தீவினாலும், தெற்கில் சிசிலியத் தீவினாலும் சூழப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆழம், 3,785 மீ. இத்தாலிய மூவலந்தீவின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் கிழக்கிலிருந்து மேற்காகப் பாயும் ஆறுகள் இதில் கலக்கின்றன.

திர்ரேனியக் கடல்
கிறிஸ்து பிறப்பதற்குமுன் ஆறாம் நூற்றாண்டிலிருந்து இத்தாலியில் உள்ள எத்ருஸ்க நாகரீகத்துடன் இனம் காணப்பட்ட டெரீனிய மக்களின் நினைவாக டெரீனியன் கடல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.