திரைப்படநுட்பத் திறவோர் குழு
திரைப்படநுட்பத் திறவோர் குழு (முக்கிய முதலெழுத்துகளின் சுருக்கமாக திபதிகு) என்று தமிழில் அழைக்கப்படும் மோசன் பிக்சர்சு எக்ஃசுபெர்ட்டுக் குரூப்பு (Motion Picture Experts Group, MPEG) என்னும் அமைப்பானது ஒலி, ஒளி சார்ந்த எண்ணிமத் தரவுளை எவ்வாறு அதிகம் தரம் மாறாமல் சுருக்கலாம் என்று ஆய்ந்து சீர்தரங்கள் வழங்கும் ஒரு திறவோர்கள் குழு ஆகும். இது ஐஎசுஓ எனப்படும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம், ஐஇசி (IEC) என அழைக்கப்படும் அனைத்துலக மின்நுட்ப ஆணைக்குழு ஆகியவை இணைந்து அமைத்த ஒரு திறவோர் குழுவாகும். இந்தத் திபதிகு என்னும் அமைப்பானது, 1988 ஆம் ஆண்டு நிப்பான் டெலிகிராஃவு டெலிபோன் (NTT) நிறுவனத்தைச் சேர்ந்த சப்பானியர் இரோசி யசூடா என்பவரும் இலியோனார்டோ சியாரிலியோன் என்னும் இத்தாலியரும் சேர்ந்து எடுத்த முன்னெடுப்புகளின் பயனாக உருவாயிற்று[1]. திபதிகு-வின் முதல் கூட்டம் மே 1988 இல் கனடாவின் தலைநகரான ஆட்டவாவில் நடந்தது[2][3][4]. 2005 ஆம் ஆண்டளவில், திபதிகு-வின் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஏறத்தாழ 350 உறுப்பினர்கள், தொழில்நிறுவனங்களில் இருந்தும் பல்கலைக்கழகங்களில் இருந்தும், ஆய்வகங்களில் இருந்தும் வந்திருந்தவர்கள், பங்குகொள்கின்றனர்.[5][6][7][8].


மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- Hans Geog Musmann (PDF), Genesis of the MP3 Audio Coding Standard, http://users.ipfw.edu/reddpv01/mp3Genesis.pdf, பார்த்த நாள்: 2011-07-26
- "About MPEG". chiariglione.org. பார்த்த நாள் 2009-12-13.
- "MPEG Meetings". chiariglione.org. பார்த்த நாள் 2009-12-13.
- chiariglione.org (2009-09-06). "Riding the Media Bits, The Faultline". பார்த்த நாள் 2010-02-09.
- ISO, IEC (2009-11-05). "ISO/IEC JTC 1/SC 29, SC 29/WG 11 Structure (ISO/IEC JTC 1/SC 29/WG 11 - Coding of Moving Pictures and Audio)". பார்த்த நாள் 2009-11-07.
- MPEG Committee. "MPEG - Moving Picture Experts Group". பார்த்த நாள் 2009-11-07.
- ISO. "MPEG Standards - Coded representation of video and audio". பார்த்த நாள் 2009-11-07.
- ISO. "JTC 1/SC 29 - Coding of audio, picture, multimedia and hypermedia information". பார்த்த நாள் 2009-11-11.
.