திருவரங்கக் கலம்பகம்

திருவரங்கக் கலம்பகம் பாடியவர் அழகிய மணவாளதாசராவர். திருவரங்கத்திலே அறிதுயில் கொள்ளும் ஸ்ரீ ரங்கநாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது திருவரங்கக் கலம்பகம். இதனுள், சிறப்புப் பாயிரமாக இரு செய்யுள்களும், காப்பாக நான்கு செய்யுள்களும், பிற் சேர்க்கையாக ஒரு செய்யுளும், நூலாக 100 செய்யுள்களும் உள்ளன. அம்மானை, இரங்கல், ஊசல், ஊர், களி, காலம், குறம், கைக்கிளை, சம்பிரதம், சித்து, தவம், தழை, நாரை, பாண், புயவகுப்பு, மடக்கு, மதங்கு, மறம், மேகம், வண்டு முதலிய உறுப்புகள் அமைய அகப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடப்பட்டுள்ளது.

கொற்றவன்தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!
  குறையுடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!
அற்றவர்சேர் திருவரங்கப் பெருமாள் தோழன்
  அவதரித்த திருக்குலமென்று அறியாய் போலும்

எனும் பாடல் பெருமாள் மீது பற்று வைத்த மறவர் குலப்பெண்ணை மன்னரே கேட்டும் மணமுடிக்க மறுப்பதாய்க் கூறுகிறது.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.