திருத்துறையூர்

துறையூர் சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று. இது இக்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. துறையூர் ஓடைகிழார் என்னும் புலவர் இவ்வூரில் வாழ்ந்துவந்தார்.இவ்வூரில் ஓடை எனப் பெயர் கொண்ட ஆறு ஒன்று ஓடியது.இதனால் இது “தண்புனல் வாயில் துறையூர்” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலவர் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள் ஆய் அண்டிரனை வாழ்த்தும்போது அவன் துறையூர் ஓடை ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல காலம் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறார். [1]

திருத்துறையூர் - திருத்தளூர் சிஷ்ட குருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ளது.நாரதர்,வசிட்டர்,அகத்தியர், சூரியன் முதலானோர் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

திருத்துறையூர் சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தத் திருத்தலம். திருவாவடுதுறை ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள இவரது ஜீவசமாதியும் இங்கு அமைந்துள்ளது. [2].மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள் புரிந்த அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயிலும் திருத்துறையூரில் அமைந்துள்ளது.[2]

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 136
  2. குமுதம் ஜோதிடம்; 23.11.2007

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.