திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்
திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் துளுவ நாட்டில் உள்ள தலமாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது. ("கோ" = பசு, "கர்ணம்" = காது)[1][2]
தேவாரம் பாடல் பெற்ற திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கோகர்ணம் |
பெயர்: | திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்கோகர்ணம் |
மாவட்டம்: | உத்தர கன்னட மாவட்டம் |
மாநிலம்: | கர்நாடகம் |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர் |
தாயார்: | கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி |
தீர்த்தம்: | கோடி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், அப்பர் |
![]() |
![]() | |
இடது: திராவிடக் கட்டிடக் கலையில் அமைந்த கோயில் கோபுரம் வலது: கோயிலின் பிரகாரம் |
ஒரே தலம்
துளுவ நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. [3]
அமைவிடம்
இத்திருக்கோயில் கோகர்ணம் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ரயில் மூலம் குண்டக்கல் வழியாக ஹூப்ளி வரை சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் செல்லக்கூடிய தலம். மங்களூரிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.[1]
வழிபட்டோர்
பிரம்ம தேவர், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், வசிஷ்டர், சரஸ்வதி தேவி ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.[1]
படக்காட்சியகம்
- கோகர்ணேஸ்வர் கோயிலின் முக்கிய நுழைவாயில்
- கோயில் தேர்
மேற்கோள்கள்
- தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 372,373
- திருமுறைத் தலங்கள் - திருக்கோகர்ணம்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009